தெருக்களில் பெண்களை தாலிபன்கள் அடிப்பது உறுதி! - ஸார்கோனா ராஸா
ஸார்கோனா ராஸா
பிரிட்டிஸ் ஆப்கன் பெண்கள் சங்கம்
காந்தகாரில் பிறந்தவரான ராஸா, 1994ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இங்கிலாந்திற்கு அடைக்கலம் தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்துவிட்டார். 2004ஆம் ஆண்டு தொடங்கி ஆப்கானிஸ்தானுக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆப்கனிலுள்ள பெண்களின் நிலை இனி என்னவாகும் என்று அவரிடம் பேசினோம்
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள் பெண்கள் விவகாரத்தில் முன்னர் நடந்துகொண்டது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லையே? நீங்கள் இதனை நம்புகிறீர்களா?
முன்னர் தாலிபன்கள் நடந்துகொண்டதை விட இப்போது மென்மையாக பெண்கள் விவகாரத்தில் நடந்துகொள்வதாக நான் நம்பவில்லை. காரணம் இன்று ஊடகங்கள் நிறைய வந்துவிட்டன. அவர்களிடம் நேர்மறையாக தங்களை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லீம் நாடுகளில் பெ்ணகள் தலையை மறைக்காமல் டிவியில் வந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள். ஆண்களும், பெண்களும் கலந்து படி்த்த பல்கலைக்கழகங்ளில் பெண்க்ள் மட்டும் தனியாக படிக்கவேண்டும் என தாலிபன்கள் கூறுவார்கள். தாலிபன்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் பெண்கள் தலையை மறைக்காமல் சுதந்திரமாக இருந்தனர். இனி காபூலில் அப்படி வலம் வரமுடியாது.
அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள்?
யாருமே தங்கள் நாட்டில் இன்னோரு நாடு ஆக்கிரமித்து போர் புரிவதை விரும்ப மாட்டார்கள். அமெரிக்கா இப்போது அங்கிருந்து வெளியேறி இருக்கிறது. இன்னொரு நாட்டின் உள்நாட்டுப்போரில் நாங்கள் பங்கேற்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். நான் அவரிடம் கேட்கிறேன். எதற்காக உள்நாட்டுப்போரை உருவாக்கினீர்கள்? அமெரிக்கா எனது நாட்டிலிருந்த வெளியேற வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது பொறுப்புணர்வோடு நடைபெறவில்லை. நாங்கள் அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். நான் இப்படியொரு நடவடிக்கையை பைடனிடம் எதிர்பார்க்கவில்லை. டிரம்ப தாலிபனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டார் என்பது உண்மை. பைடனும் அதேபோல நடந்துகொள்வார் என நான் நினைக்கவில்லை. ஆயுதப்படைகள் அங்கு மோசமான நிலையில் உள்ளன. அங்குள்ள குடும்பங்கள் எதையும் எடுத்துக்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஷரியா சட்டப்படி பெண்கள் நிறுவனங்களில் வேலைபார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.இதன் அர்த்தம் என்ன?
ஆப்கன் பெண்ணாக ஷரியா சட்டப்படி வேலைபார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. அங்குள்ள பலரும் படிப்பறிவு இல்லாதவர்கள். அங்குள்ள முல்லாக்கள் மசூதியில் ஷரியா சட்டத்தை சொல்லித்தந்து வருகிறார்கள். அவர்களுக்கு குரானின் அராபிய வடிவத்தை படிக்கத் தெரியாது. தாலிபன்கள் பெண்களை கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கு அனுமதிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். வேறு பணிகளுக்கு வாழ்க்கைக்கு அங்கு அனுமதி இல்லை.
அமெரிக்க நிர்வாகத்திற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உங்கள் நாட்டு குடிமகன்களைப் போல எங்கள் நாட்டையும் பாருங்கள். அவர்களது நாட்டு மக்களுக்கு உதவுவது அமெரிக்காவின் முக்கியமான கடமை.
தாலிபன்கள் இல்லாத இருபது ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட வளர்ச்சி பற்றி கூறுங்கள்.
நாட்டில் 27 சதவீத பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நிறைய பெண் வழக்குரைஞர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக தொழில்துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெ்ண பத்திரிகையாளர்களும் அதிகமாக உள்ளது எனக்கு ஊக்கமளித்துள்ளது. பெண்கள் தனியாக சாலைகளில் செல்லலாம். வண்டிகளை ஓட்டலாம். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தலையை மறைக்க வேண்டியதில்லை. ஆசிரியரும் அப்படித்தான். இஸ்லாமிய மக்களுகாக இருந்தாலும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணம் மக்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது பின்னோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
தாலிபன்கள் 1996 முதல் 2001 வரை ஆட்சியிலிருந்தனர். அப்போது உங்கள் குடும்பம் ஆப்கனில்தானே இருந்தது?
ஆமாம், எனது மூத்த சகோதரிகள் அங்கு இருந்தனர். ஒரு சகோதரி விவசாயத்துறையில் பணிபுரிந்தார். தாலிபன்கள் அங்கு வந்து ஆட்சியைப் பிடித்ததும், அவரை அலுவலகத்தில் அழைத்துப் பேசி இனி வீட்டிலேயே இருங்கள் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இன்னொரு அக்கா, வீட்டின் படிகளையும், ஜன்னல்களையும் சுத்தப்படுத்தியபோது தாலிபன்களால் தாக்கப்பட்டார். வீட்டை விட்டு வெளியே உன்னை யார் வரச்சொன்னது என கண்டிக்கப்பட்டார்.
பெண்கள் வெளியே வந்தால் ஆண்களின் பாதுகாப்புடன்தான் வரவேண்டும். அப்படி வந்தாலும் அவர்கள் தெருக்களில் நிறுத்தி விசாரிக்கப்பட்டு லத்திகளால் அடிக்கப்படுவார்கள். எப்படி இருந்தாலும் பெண்கள் அடிபடுவது உறுதி.
டைம்ஸ் ஆப் இந்தியா
நவோமி கேண்டன்
கருத்துகள்
கருத்துரையிடுக