நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா
இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு
இந்தியா தனது 75ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம். பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர். ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம்.
பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான். பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம். அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார். இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும். இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார். இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம்.
நேருவின் சோசலிசம், மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை தவிர்த்து பேபியன் சோசலிசத்தை தழுவியது அவர் 1936 வரையிலான காலகட்டத்தில் சோசலிசத்தைக் கடைப்பிடித்தார். வல்லரசு நாடுகள் கச்சாப் பொருட்களுக்காக காலனி நாடுகளை பயன்படுத்துவதை கவனித்தார். அந்த வகையில் அதே முதலாளித்துவ மாதிரியை அப்படியே இறக்குமதி செய்துதான் கனரக தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கினார். நாம் முதலாளித்துவத்திற்கு பலியானவர்களாக இருக்கவேண்டுமா அல்லது அதற்கு இணையான துடிப்பு கொண்டவர்களாக உருவாக வேண்டாமா என டிஸ்கவரி ஆப் இந்தியா நூலில் எழுதியுள்ளார்
தொழில்மயமாக்கம், தன்னிறைவு என்பதை சரியான அர்த்தத்தில் நேரு புரிந்துகொள்ளவில்லை. இதனால் பெரும் தொழிற்சாலைகளை அமைத்து எந்திர பாகங்ளை தயாரித்து, அதனை பொருத்தி பெரும் எந்திரங்களை தயார் செய்வதாக தொழில்துறை செயல்பட்டது. இதில் எந்திரங்கள் மக்களுக்கு தேவையான என்ற கேள்வியே எழவில்லை. மேற்கு நாடுகளில் பெறப்பட்ட தொழில்மயமாக்கல் மாதிரியை சரியாக புரிந்துகொள்ளாமல் இந்தியாவில் செயல்படுத்தினார். இதுபற்றி 1956இல் பேசும்போது, நாம் மக்களுக்கான தினசரி பயன்படுத்தும் பொருட்களை உருவாக்க நினைத்தோம், ஆனால் இப்போது அனைத்திற்கும் அடிப்படையான தாய் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளோம். இதில் இரும்பு, ஸ்டீல் ஆகியவை உற்பத்தியாகும். இதனைப் பயன்படுத்தி எந்திரங்களை உருவாக்கலாம் என நம்பிக்கையோடு பேசியுள்ளார். 1953ஆம் ஆண்டு பேச்சின்போது, நாம் பெரும் தொழிற்சாலைகளை தொடங்கினால்தான் நவீன விஷயங்களில் நம்மை பொருத்திக்கொள்ள முடியும், ரயில்கள், துப்பாக்கி, விமானங்கள் ஆகியவற்றை நாமே உருவாக்கியுள்ளோம். இவற்றை வெளிநாடுகளில் வாங்கினால் நாம் அவர்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே பொருள் என்று பேசினார்.
நேரு தனது பிரதமர் பதவிக்காலத்தில் மேற்சொன்னதை நிறைய இடங்களில் பேசியுள்ளார். இவரது நடவடிக்கை காரணமாக பெரும் தொழிற்சாலைகளுக்கு அரசு நிறைய தொகையை முதலீடு செய்தது. இதில் திறமை இல்லாத சிலருக்கு வேலைகள் கிடைத்தாலும் சிறு, குறு தொழிற்சாலைகள் முதலீடு கிடைக்காமல் தள்ளாடத் தொடங்கின. அவற்றின் வருமானம் நாட்டுக்கு பெரும் உதவி செய்தாலும் அரசின் உதவி கிடைக்காத காரணத்தால் பெரியளவு வளர்ச்சியைப் பெறமுடியவில்லை. அரசு இந்த நேரத்தில் வெளிநாட்டிலுள்ள பொருட்களை உள்நாட்டில் பெறவும் உரிமம் தேவை என கட்டுப்பாடுகளை விதித்து வளர்ச்சிக்கு எதிராக மாறியது.
விவசாயத் துறையில் இருந்த மக்களின் எண்ணிக்கை 1951 ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டு வரை பெரிய மாற்றம் இல்லாமல் 69.7 சதவீதமாகவே இருந்தது. இதற்கு என்ன அர்த்தம், அவர்கள் வறுமையில் இருந்து மீளமே இல்லை என்பதுதானே?
அரவிந்த் பனகரியா
கொலம்பிய பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர்
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக