இடுகைகள்

கதிரவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாக்கை உயிர்ப்பித்த சுலைமானி தேநீர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  புராணங்களின் சுவாரசியமான மறுபுனைவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? ஞாயிறு பொதுமுடக்கம் இல்லை . எனவே , சன் மோகன் அண்ணா அறைக்குச் செல்ல நினைத்தேன் . அவர் , ஓடிடி ஒன்றுக்கு தனது படத்தை இயக்கும் வேலையில் வேகத்தில் இருந்தார் . எனவே , நான் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன் . காலையில் நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது வழக்கம் . ஒருவேளை உணவு , ஒரு படம் என்பதுதான் இயல்பாக அமைந்த பழக்கம் . அவரது அறையில் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா படம் பார்த்தோம் . ஒவ்வொரு காட்சிக்கும் சக்தி சார் என்னைப் பார்த்து கேலிப்புன்னகை செய்துகொண்டே இருந்தார் . அது மட்டுமே சங்கடம் . மற்றபடி படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை . பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் . விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயக்குநர் போயபட்டி சீனு படம் எடுத்திருந்தார் . வாழ்க்கையைத் தாண்டிய புனைவுப்படம் . தியேட்டரில் விசில் அடித்து பார்க்கவேண்டிய படம் . அதற்காகவே படத்தை எடுத்திருக்கிறார்கள் . ஓடிடியில் பார்த்தாலும் கூட டிவியின் பிரேமிற்குள் காட்சிகள் அடங்கவில்லை . கனிமச்சுரங்

ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான துயர் தரும் வலி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்கள் உடல் , மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன் . மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன் . தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை . தனித்தமிழில் எழுதுவது , சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார் . தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன . இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன் . இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன் . அவர் தனது மனைவி , குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார் . வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார் . மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன் . கிராமத்து சூப்பர் ஹீரோ கதை . நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் . படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான் . அதாவது , நாடக கலைஞரான குரு சோமசுந்தரம் . இவர் , தனது அம்மா , காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார் . பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார் . அதில் ஏதும்

தீக்குச்சியை எரித்தே வெளிச்சம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிக்பாக்கெட் டூ ரட்சகர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும் . எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார் . அதாவது , தினசரி எங்களுக்கு வேலை உண்டு . இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ் , டி . எம் . கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன் . ஊக்கமூட்டும்படி இருந்தது . சமஸ் செயலூக்கம் பற்றியும் , ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார் . வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு , நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார் . கலை எப்படி மனிதனை மாற்றுகிறது , அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை . இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான் . காலையில் கவிதா அக்கா பேசினார் . தற்போது ஓமனில் வாழ்கிறார் . எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர் . அவருக்குப் பிடித்த நூல்கள் , வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம் . விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார் . இவர் எனக்கு நண்பரல்ல . அண்ணனின் தோழி . உறவினர் . தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித

மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மழையால் மந்தநிலை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது . சூரியனைப் பார்க்கவே முடியவில்லை . டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை . அந்த இடத்திலும் போட்டி போட்டு ர . ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள் . அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் . போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும் ? ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன் . ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர் . அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி . அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை . இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள் , மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன் . மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது . படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன . அவற்றையும் இனி படிக்க வேண்டும் . துப்பறியும் சாம்பு - 2 நூலி