இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனி என்ன?

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் எப்படியோ எனக்குப் பிடித்த நவம்பர் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது மகிழ்ச்சி. இந்த எழுத்துக்கள் புத்தகமாக காகிதமாக மாறுமா என்று எனக்கு தெரியவில்லை. எந்த வாக்குறுதிகளை இப்போது நான் நம்புவதில்லை. நான் முடிந்தவரை மூலத்துக்கு நேர்மையாக இருந்திருக்கிறேன். என்னுடைய நோக்கமெல்லாம் இதில் பவுலோஸ் வெளிப்படவேண்டும் என்பதுதான். ஆனால் லாய்ட்டர் லூன் வெளித்தெரிந்தால் நிச்சயம் இது மலினமான மொழிபெயர்ப்புதான். ஐயமில்லை.           இனி இதுபோல நெடுந்தொடர்கள் சில காலம் எழுதப்போவதில்லை. தனிமனிதர்கள் குறித்த கட்டுரைகளின் மேல் கவனம் குவிக்க ஆசை. மேலும் வேறு வேலைக்கு வேறு நான் முயற்சி செய்யவேண்டும் என்கிற அலுவலக நெருக்கடி வேறு. தொடர்ந்து வலைப்பூ எழுதுவது கடினமாகி உள்ளது. என்னிடம் சொந்த கணினி கிடையாது. இந்நிலையில் அலுவலகத்திற்கு நேரமே சென்று தட்டச்சு செய்து பதிவிட்டதுதான் இந்த முழு நூலுமே. படித்த கருத்துக்களை கூறிய மெய்ஞானிகளுக்கு நன்றி. 

மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு]

16 மீதியுள்ளவை அனைத்தும் டான் ஃபைனாரு] உங்களது பெற்றோர்கள் தென் பகுதியைச் சேர்ந்த பெலோனிசஸ் மறும் க்ரேட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்றும் நீங்கள் கரும் மேகங்கள், கடும் மழை, கடும் குளிர்காலம் கொண்ட வட பகுதியில்தான் பெரும்பாலும் கவனத்தைக் குவித்திருக்கிறீர்கள்.      இக்கேள்வி எப்போதும் என்னை நோக்கி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு எவ்வித விளக்கமும் நான் அளிக்கப்போவதில்லை. இதற்கான விடையை கடந்த காலத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. உளவியால் ஆய்வாளர்கள் வேண்டுமானால் இதற்கான ஆதாரங்களை கண்டறிய முடியலாம். மறுகட்டமைப்பு எனும் எனது முழுநீளப்படத்தினை எடுப்பதற்கான சென்றிருந்த நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன். அந்த நிலப்பரப்பு முழுக்க சாம்பல் நிறமாக இருந்தது. கருமையான மேகங்கள், கவர்ச்சியற்ற எளிய வீடுகள், பெரும் மலைகள் அவற்றின் பின்னணியில் இருக்க, மெல்லிய தூறலாய் மழை பெய்துகொண்டிருக்க பனி ஒரு திரைபோல மலையினை மூடிய சூழலில் கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. 1950 இல் பெரும்பாலான கிரீக் மக்களைப் போல அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனிக்கு வேலை தேடி செ