இடுகைகள்

டோபமைன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மது அருந்தினால் உடலில் என்ன நடக்கிறது?

படம்
ஆல்கஹால் ஊக்கமூட்டியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதனைக் குடித்தவுடன் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டது போன்ற இலகுவான தன்மை ஏற்படும். காற்றில் பறப்பது போல. இதனால்தான் இலகுவான இந்நேரத்தில் பல்வேறு ரகசிய விஷயங்களை நண்பர்களிடம் கொட்டி விடுகின்றனர். ஆனால் அதேசமயம் இதனை குடித்தான் பேசினான் என்று ஒதுக்கிவிட முடியாது. குடித்தாலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் வேறுபாடு தெரியாமல் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஊக்கமூட்டியா அல்லது மூளைத்திறன் குறைப்பு மருந்தா காபி, டீ ஆகியவற்றை குடிக்கிறீர்கள். இவற்றின் அளவு அதிகமானால் என்னாகும்? சிம்பிள். தூக்கம் வராது. இரவில் டீ, காபி குடிப்பதை தொடர்ந்தால் இன்சோம்னியா எனும் தூக்க குறைவு பிரச்னை எழும். அதுவே ஆறுமணிக்கு ஆபீஸ் விட்டதும் மது அருந்துவதை வழக்கமாக்கினால் என்னாகும்? உங்களின் இதயத்துடிப்பு குறையும். மூளை ரிலாக்ஸ் ஆனது போல தோன்றும். ஆனால் உங்கள் உடலில் ஒட்டுமொத்த பணிகளையும் மது தடுத்து மாய உலகை உருவாக்குகிறது. டீ, காபி ஆகியவற்றிலுள்ள காஃபீன் உடலை ஊக்கமூட்டி, தூங்கி வழிந்துகொண்டிருந்தால் கூட உங்களுக்கு கூடுதலாக அரைமணிநேரம் ப

சர்க்கரை சாப்பிடும்போது என்னாகிறது?

படம்
birdee சர்க்கரை சாப்பிடும்போது என்னவாகிறது? சர்க்கரை பிடிக்காதவர்கள் யார் உண்டு. அனைவருக்கும் சர்க்கரை மீது தனி ஆசை உண்டு. அமெரிக்காவின் பென்சில்வேனியா, உலகின் சாக்லெட் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவு புகழ்பெற்றது. சர்க்கரை உணவுகளை சாப்பிடத் தொடங்குவதால் ஏராளமான பிரச்னைகளை உடலுக்கு ஏற்படுகின்றன. இதன் பாதிப்புகள் பலருக்கும் ஏற்பட, அதன் தாக்கத்தை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர். நரம்பியல் அறிவியலில், உணவு என்பது இயற்கையான பரிசாக கூறப்பட்டுள்ளது. உயிரினமாக நாம் வாழ்வதற்கு, சாப்பிடுவதும், பாலுறவும்  முக்கியமானது. மூளையின் முன்புறத்திலுள்ள நியூக்ளியஸ் அகும்பென்ஸ், சாக்லெட் கேக்கை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இதிலுள்ள டோபமைன் எனும் ஹார்மோன், கேக்கின் சுவையை மூளையில் பதிந்து வைத்துக்கொண்டு மீண்டும் அதனை உண்ணுமாறு தூண்டுகிறது. இதிலும் கூட இனிப்பை மட்டுமே அதிகம் தேர்ந்தெடுப்போம். காரணம் ஆதிகாலத்து உணர்வுதான். இயல்பாகவே இனிப்பு என்பது சரியான உணவாகவும், கசப்பு என்பது விஷம் எனவும் நம் மூளையில் பதிந்துள்ளது. இது பல்வேறு தலைமுறையாக நம் ஜீனில் பதிந்து வந்த