தாயை மீட்பதை விட்டுவிட்டு கவர்ச்சிப் பெண்கள் பக்கம் மடைமாறும் நாயகன்!
வென்ஜென்ஸ் ஆஃப் ஹெவன்லி டீமன் மங்காகோ.காம் 70 க்கும் கூடுதலாக அத்தியாயங்கள் மு குடும்பத்தைச் சேர்ந்தவன் நாயகன் மு. இவனுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள ரத்தம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறி அடித்து உதைத்து தற்காப்புக்கலை கற்கும் உடல் பாகங்களை சிதைத்து அனுப்புகிறார்கள். இவனது சகோதரன்தான் அதை செய்கிறான். குற்றுயிராக கிடப்பவனை வயதான மாஸ்டர் ஒருவர் எடுத்து உயிரைக் காப்பாற்றி, சில பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கிறார். அப்போதுதான் நாயகனுக்கு ஹெவன்லி டீமன் இனக்குழுவின் ரத்தம் தனக்குள் ஓடுகிறது என தெரியவருகிறது. அவனது குடும்பம் அவனை வெளியே தள்ளிவிட்டது. அவனது அம்மா, அப்பாவின் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். நாயகனுக்கு அம்மாவை மீட்பதுதான் முக்கியம். அவனால் அம்மாவை மீட்க முடிந்ததா, இடையில் சந்தித்த திருடர்கள், ஆகாய நகர தூதர்கள், வெட்டிப்பெருமை பேசும் பணக்கார வாரிசுகள் என நிறையப் பேர்களை நாயகன் மு எதிர்கொண்டு சண்டை போடுகிறான். மங்காகோ.காமில் காமிக்ஸ் படங்களை குறிப்பிட்ட முறையில் வெட்டி ஒட்டி பதிவிடுகிறார்கள். அது அனைத்து காமிக்ஸ் கதைகளுக்கும் பொருத்தமாக இல்லை. சிலசமயங்களில் படங்கள் த...