இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வதும். மற்றபடி, ப

உடற்பயிற்சியை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?

  சும்மா செய்யுங்க ப்ரோ இதயத்தசைக்கு நல்லது, மண்ணீரலுக்கு மிக நல்லது என்றெல்லாம் உடற்பயிற்சியை சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். எளிமையான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.அவ்வளவுதான். பலாபலன்களை ஆராய்ந்து படிப்பவர்கள், உடற்பயிற்சியை செய்ய மாட்டார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் சேகர் விளக்கி, நோ ஸ்வெட் ஹவ் சிம்பிள் சயின்ஸ் மோட்டிவேஷன் கேன் பிரிங் யூ எ லைஃப்டைம் ஃபிட்னெஸ் என்ற நூலைக்கூட எழுதியிருக்கிறார். நாளையைப் பற்றிய யோசனை வேண்டாம். இன்று உடற்பயிற்சி செய்யுங்கள். நாளைக்கு வேலையை நாளை பார்ப்போம்.  எளிய உடற்பயிற்சி போதும் இணையத்தில் அனடோலி என்ற உடற்பயிற்சி வல்லுநர் இருக்கிறார். ஜிம்களுக்கு போய் அங்கு போலியாக எடையைத் தூக்கி வீடியோபோடும் ஆட்களை கிண்டல் செய்வதே அவர் வாடிக்கை. அவர் அளவுக்கு பார்பெல் தூக்கி பயிற்சி செய்யவேண்டியதில்லை. புஷ் அப் எடுக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சியை நீங்கள் தண்டனையாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போதுதான் அதை தொடர்ந்து செய்யமுடியும்.  பழக்கமே சிறக்கும் காரை ஓட்டக் கற்க

ஜிம் பாடல்கள்!

  ஜிம் பாடல்கள் மோசமான மனிதர்களைப் பார்ப்பதும், அவர்கள் பேசும் அவதூறுகளை கேட்பதும் வாழ்க்கையை சலிப்படையச் செய்வன. ஆனால், நூல்களும், இசையும் வாழ்க்கையை வளமாக்கி பொலிவடையச் செய்வன. எனவே, இசையைக் கேட்போம். மேற்கத்திய சுதந்திரமான இசை பரிந்துரை. பாடல்களைப் பற்றிய விளக்கம் தேவையில்லை. கேளுங்கள். உங்களுக்கே புரிபடும். உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் மனத்தடைகள், தயக்கம் உடைந்து பயிற்சி முழுமையடைய இப்பாடல்கள் கொஞ்சமேனும் உதவக்கூடும்.  LA ROMANIA BAD BUUNY FEAT EL ALFA DANCE MONKEY POP BALLAD MOTIVATION NORMANI GOOD AS HELL LIZZO DONT START NOW  DUA LIPA VOSSI BOP STORMZY CON ALTURA ROSALIA, J BALVIN FEAT EL GUINCHO TILL I COLAPSE EMINEM WAKE ME UP AVICII EYE OF THE TIGER SURVIVOR
  loulon  chinese movie iqyi app லூலோன் என்ற இடத்தில் உள்ள பொக்கிஷத்தை பாதுகாக்க நினைக்கும் நாயகன், அதை திருட நினைக்கும் ஜப்பான் கைக்கூலி என கதை செல்கிறது. சீனத் திரைப்படம் என்பதால், ஜெயம் நாயகன் பக்கம்தான் என்பதால் பெரிதாக கவலைப்படவேண்டியதில்லை.  நாயகன் மத்திய வயதில் உள்ளவர். படத்தின் தயாரிப்பாளராக கூட இருக்கலாம். பொக்கிஷங்களைத் தேடும் படத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த படத்திற்கும் பொருந்தும். ஆக்ரோஷ நாட்டைக்காக்கும் நாயகன், அப்பாவைத் தேடும் நாயகி, போதை, பேராசை என வாழும் நண்பன், சீன பொக்கிஷங்களை அபகரிக்கும் ஜப்பானிய கைக்கூலி எல்லாம் பெரிதாக மாறவில்லை.  இந்த படத்தில் ஜப்பானியர்களுக்கும், சீன நாயகனுக்குமான சண்டை நீண்டுகொண்டே செல்கிறது. போதும் போதும் மெயின் கதைக்கு வாங்கடா என்றால் வராமல் ஒளிந்து சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாயகன், ஜப்பானியர்களை ஆசை தீர சுட்டுக்கொன்றுகொண்டே இருக்கிறார்.  பொக்கிஷ குகையில் பூரான் போல ஒரு ஜந்து உள்ளது. அதுதான் அங்கு வருபவர்களைக் கொன்று பொக்கிஷத்தைக் காக்கிறது. அதைத்தாண்டி குகையில் பெரிய ஆபத்து ஏதும் இல்லை. மனிதர்களின் அமரத்துவ ஆசையைத் தவிர. அதுத

ஏஐ முன்னோடிகள்!

படம்
  ஏஐ முன்னோடிகள்  டைம் இதழில் வெளியான ஏஐ சிறப்பிதழில் இடம்பெற்ற பிரபலமான ஏஐ ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இவை.  ஜேம்ஸ் மான்யிகா துணைத்தலைவர், ஆராய்ச்சி தொழில்நுட்ப சங்கம், கூகுள் james manyika google ஏஐ தொழில்நுட்பத்தை சந்தையில் பிறருடன் போட்டியிடுவதை விட அதை சரியான காரணத்திற்காக பயன்படுத்தவேண்டும் என ஜேம்ஸ் நினைக்கிறார். இதனால்தான், அவர் காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என பரந்துபட்ட துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவாக்க முயன்று வருகிறார். வெள்ள அபாயம் பற்றிய ஃப்ளுட் ஹப் என்ற தொழில்நுட்பம் எண்பது நாடுகளில் விரிவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் வெள்ள அபாயத்தை முன்னரே மக்கள் அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.  அதேசமயம் ஏஐ தவறானவர்கள் குறிப்பாக சர்வாதிகார அரசின் கைகளுக்கு சென்றால் ஏற்படும் அபாயம் பற்றியும் பிரசாரம் செய்கிறார். பேசுகிறார், எழுதி வருகிறார். ஆலோசனை அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார். தொழில்நுட்பம் வேகமாக சந்தைக்கு வந்தால் வணிகம் சிறக்கும், ஆனால் ஜேம்ஸ் வேகத்தை விட விவேகம் முக்கியம் என நினைக்கிறார்.  ஃபெய் ஃபெய் லீ பே

பிரச்னைகளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் வாங்க! யொஹான் கால்டுங்கின் 'தகராறு'

படம்
  தகராறு யொஹான் கால்டுங் தமிழில் சுப உதயகுமாரன் விகடன் பிரசுரம் அணு உலைக்கு எதிராக போராடிய போராளியான சுப உதயகுமாரன்தான் நூலை அனுமதி பெற்று மொழிபெயர்த்திருக்கிறார். நூலை எழுதியவர் வேறு யாருமல்ல, அவரின் குருநாதர்தான். தந்தி போன்ற சுருக்கமான மொழியை தனக்கு புரிந்தவகையில் விளக்கியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  தகராறு என்பது என்ன, அதை எப்படி தீர்ப்பது, இதுபற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவது எப்படி, அங்கு நாற்காலிகள், மேசைகள், அலங்காரம் எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பது வரை நூலில் விளக்கமாக பேசப்படுகிறது. கூடுதலாக, எந்தெந்த உலக நாடுகளில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன, அதில் தீர்வு எப்படி கிடைத்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என நிறைய விஷயங்களை கால்டுங் விளக்கி உள்ளார்.  கால்டுங், அமைதி பேச்சுவார்த்தைக்காக பல்வேறு அரசு அமைப்புகளில் இடம்பிடித்த அறிவாளி. ட்ரான்ஸ்சென்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நூலில் மூல நூல் ஆசிரியரின் பகுதிகள் முடிந்தபிறகும் கூட சுப உதயகுமாரன் திருக்குறள் பகுதியை இணைத்துள்ளார். அதுவும் வாசிக்க நன்றாகவே இருக்கிறத

நாய் போல ஒடுங்கி வாழும் இளைஞன் வீர தீர சூரனாகி வாள் எடுக்கும் கதை!

படம்
  சோல் ஆஃப் பிளேட்ஸ் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாம்கூங் என்ற குடும்பம் வாள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரும்பாடுபட்டு வாள் ஒன்றைச் செய்கிறார். ஆனால் அப்படி செய்யும்போது மனதில் உருவாகும் ஆசை,வாளில் தீய ஆன்மாகவாக மாறுகிறது. எனவே, அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து புகழ்பெற்ற வாள்வீரர், அதை திருடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு அந்த வாளை வைத்து நிறைய விஷயங்களை சாதிக்க ஆசை. உண்மையில் அந்த வாளைத் தேடி ஏராளமானவர்கள் சுற்றி வருகிறார்கள். அந்த வாள் யாருக்கு கிடைத்தது என்பதே கதையின் இறுதிப்பகுதி.  படத்தில் நாயகனுக்கு பெயரே நாய்தான். மிஸ்டர் நாய் என அழைத்து தூற்றுகிறார்கள். அவனது இளமைக்காலம் கொடுமைகள் நிறைந்தது. ஒரு துண்டு இறைச்சிக்காக நாயுடன் சண்டையிட்டு வாழ்கிறான். அப்படியே வாழ்ந்து கோழைத்தனமும், உயிரைக் காப்பாற்றி்க்கொள்ளும் சாதுரியமும் வருகிறது. ஆனால் வீரம், தைரியம், நேர்மை வரவில்லை. இதை அவன் மெல்ல கற்றுக்கொண்டு வாளை எப்படி கையில் எடுத்து வாளின் ஆன்மா இருந்தாலும் இல்லையென்றாலும் வீரனாக இருக்கிறான் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்.  படம் நெடுக ந

சொத்துக்களை எரி, சிறையில் அடை, வணிகத்தை தடு - இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடமான உத்தர்கண்ட் மாநிலம்!

படம்
  அதீத இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடம்! இந்தியாவிலுள்ள உத்தர்கண்ட் மாநிலம் கடவுளின் நிலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல நூறு கடவுள்கள் இருக்கிறார்கள் எந்த கடவுளுக்கு சொந்தமான நிலம் என்றால், இந்துக்கடவுள்களுக்கான நிலம் என பல நூற்றாண்டுகளாக கூறி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களும், புனிதப்பயணம் செய்வதற்கான இடங்களும் உள்ளன.  கடந்த பத்தாண்டுகளாக வலதுசாரி மத அடிப்படைவாதிகள், உத்தர்கண்ட் மாநிலத்தை அதீத தேசியவாதத்தை அரசியல் சக்தியாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள முஸ்லீம் சிறுபான்மையினரை பகிரங்கமாக மிரட்டியும், இனப்படுகொலை செய்வோம் என சூளுரைக்கவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாவது முறையும் வெறுப்பு, பிரிவினை கருத்துகள், முஸ்லீம்களை அடிப்போம், துரத்துவோம், 400 இடங்கள் வென்றால் அரசியலமைப்பை மாற்றுவோம், மசூதியை இடிப்போம் என ஆக்கப்பூர்வமான பல்வேறு வாக்குறுதிகளை பாரதீயன்கள் வெளிப்படையாக அளித்து வருகிறார்கள்.  கல்வி அறிவு இல்லாத மூடநம்பிக்கையில் ஊறிய, தனது வாழ்க்கையை முன்னேற்ற வானத்தில்

ஏஐயைப் பயன்படுத்தி வேலையில் சாதிக்கலாம்!

படம்
  இருப்பதிலேயே குறைந்த கூலிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து செக்குமாடு போல வேலைவாங்கும் நாளிதழ் நிறுவனம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு போவது உங்கள் விதியாக இருந்தாலும் ஏஐ பற்றி அறிந்து கொள்வது நல்லது. தெரிந்துகொண்டால் அங்கிருந்து தப்பி நல்ல நிறுவனத்திற்கு வேலைக்குப் போகலாம். உலகம் முழுக்க 300 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏஐ மூலம் பாதிக்கப்படவிருக்கின்றன என மெக்கின்சி ஆய்வு நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டால் நல்லது.  டெக் கம்பெனி அல்லாத நிறுவனத்திற்கு சென்றால் கூட ஏஐ பற்றிய அறிவை பணியாளர் கொண்டிருப்பதை வேலைக்கு எடுப்பவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் உதவும் என அவர் நினைக்கலாம். வடிவமைப்பாளராக இருப்பவர்கள், சாட்ஜிபிடி, டால் இ ஆகிய மாடல்களை கற்பது அவர்களின் கிரியேட்டிவிட்டியை உயரே கொண்டு செல்லும். மொத்த வித்தையையும் டிசைனில் இறக்கியிருக்கேன் என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு முதலாளியிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம். உலகளவில் அடிப்படையான ஏஐ பற்றிய படிப்புகள் கற்றுத்தரப

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பாலின பாகுபாடு உள்ளது!

படம்
  டாமியன் பேட்ரிக் வில்லியம்ஸ் damien p williams நார்த் கரோலினா பல்கலையில் தகவல் அறிவியலாளராக உள்ளார். ஏஐ மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.  செயற்கை நுண்ணறிவில் பாகுபாடு உண்டா? ஏஐக்கு நாம் தரும் தகவல்களைப் பொறுத்துதான் அதன் செயல்பாடு அமைகிறது. அதை வெறும் கணித செயல்பாடுகளை செய்யும் தொழில்நுட்பமாக கருதவேண்டாம். அந்த அமைப்பிற்கு பயிற்சி அளிக்கும்போது கொடுக்கும் தகவல்களில் கவனம் செலுத்தவேண்டும். மனிதர்கள்தான் தகவல்களை ஏஐக்கு வழங்குகிறார்கள். எனவே, அவர்களின் மதிப்பீடுகள், பார்வைக்கோணம், பாகுபாடுகளும் அதில் சேர்ந்துவிடுகிறது.  ஏஐ அமைப்பிலுள்ள பாகுபாடுகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுக்கு பொதுவெளியில் உள்ள தகவல்களை கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். இதில் அதிகம் கிடைப்பது கருப்பினத்தவர்களின் புகைப்படங்கள்தான். எனவே, குற்றம், தீவிரவாதம் தொடர்பான பிரச்னைகளில் செயற்கை நுண்ணறிவு கருப்பினத்தவர்களை குற்றவாளி என அடையாளம் காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் கருப்பினத்தவர்களின் பெயர்களை ஏஐ தவிர்க்கிறது. தகுதி இருந்தாலும் புறக்கணிக்கிறது. இதில் வேலை தருபவர்களின் இனவெறி மனநிலைய

சிறைக்கைதி பழிக்குபழி வாங்கி எதிரிகளை துண்டு துண்டாக வெட்டி எறியும் கதை!

  வூ சாங்  சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாயகன் வூ சாங் ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அண்ணன் இறந்துபோய் ஊதுபத்தி ஏற்றிவைத்திருக்கிறது. அண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அண்ணனைக் கொன்றுவிட்டாள் என உண்மை தெரிகிறது. அண்ணியின் தலையை வெட்டிய கொழுந்தன், கள்ளக்காதலனை தேடி விலைமாதுவின் இல்லம் செல்கிறான். சண்டையிட்டு கொன்று இருவரின் தலைகளையும் எடுத்து அண்ணனின் அஞ்சலி செலுத்தும் இடத்தில் போட்டுவிட்டு காவல்துறையில் சரணடைகிறான்.  சிறைக்கு செல்பவனை, ஜெயிலர் மூலம் ஓட்டல் நடத்துபவர் சந்தித்து அவனது உதவியைக்கேட்கிறார். அதாவது, அவரது தம்பி நடத்தும் ஓட்டலை ரவுடி ஒருவன் பிடித்துக்கொள்கிறான். அவனை கொல்ல வேண்டும். இல்லையா அடித்து உதைக்கவேண்டும். சிறையில் உள்ளவனுக்கு ஓட்டல்காரர் ஐந்து நாட்கள் இறைச்சியும் மதுவும் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறார். நாயகன், சாப்பிட்ட சோறுக்கு நியாயம் செய்ய ரவுடியை சந்திக்க செல்கிறான். ரவுடியின் மனைவியை தூக்கி பீப்பாய் தண்ணீரில் தலைகுப்புற வீசுகிறான். ரவுடியை  அடித்து உதைத்து ஓட்டலை மீட்கிறான். என்னா அடி... மது வைத்துள்ள பானைகள் எல்லாம் சிதறுகின்றன.  பிறகு ஒருநாள் பணக

நகரில் திடீரென நெருப்பால் எரிந்து இறந்துபோகும் மனிதர்கள்! - பின்னணியை ஆராயும் இரண்டு காவல் அதிகாரிகள்!

படம்
  அல்டிமேட் சீக்ரெட் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப்  சீன நகரம். அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளால் அதன் நிம்மதியை அழிக்க சிலர் முயல்கிறார்கள். அதற்காக பேய் கொலை செய்கிறது என நம்பும்படியான ஜெகஜால பேய் முகமூடி தோற்றத்தில் சிலரை நெருப்பால் எரித்துக் கொல்கிறார்கள். அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் இருவர் எப்படி விசாரித்து அறிகிறார்கள் என்பதே கதை.  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருள் பற்றிய கதை. ஆனால் அதை கதையில் கொண்டு வந்து விளக்குவதற்குள் நமக்கு படம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது. நாயகன், காவல்துறை அதிகாரி. ஆனால் எப்போதும் சரக்கு போட்டுக்கொண்டு விலைமாதுக்களின் மடியே கதியென்று கிடக்கிறான். ஏன் அப்படி? அவனுக்கென்று முன்னாள் காதலி இருப்பாள். ஆனால் அவள் இன்னொரு வசதியான ஆளை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள் என்பதே காரணம். அந்த செய்தி, அதிலுள்ள உண்மை மனதை வருத்தும்போதெல்லாம் நாயகன் மது அருந்துகிறான். எப்போதெல்லாம் வருந்துகிறான்? எப்போதுமேதான். படம் முழுக்க நாயகன் மது போதையிலேயே இருக்கிறான்.  இவனுக்கு நேர் மாறாக ஆன்ம ஆற்றல் கொண்டவனாக இன்னொரு காவல் அதிகாரி, பச்சை மாவு பிடித்தது போல கும்

சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!

படம்
  ஷூ ஃபூ டிரஷ்சர் சீன திரைப்படம்  ஒன்றரைமணிநேரம் ஐக்யூயி ஆப் கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம்.  நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது.  நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள்.  நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான்.  சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்துவிட மக்கள் தயாராக இல்லை. சினி

பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

படம்
  பௌத்தம் என்றால் என்ன? பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது.  பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா? தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம்.  புத்தர் என்பவர் யார்? கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல் அந்த குழந்தை

ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!

படம்
  எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம்.  மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்? அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம், அறுவை சிகிச்

அரசாட்சியைப் பிடிக்க மனிதர்களை அதீத ஆற்றல் கொண்ட கொலைமிருகங்களாக மாற்றும் மர்ம மனிதர்கள்!

படம்
  டிரென்ஜி - ஃபயர் கிரின் சீன திரைப்படம் ஓன்றரை மணி நேர படம் ஐக்யூயி ஆப் டாங் மன்னர் கால ஆட்சியில் நீதித்துறையில் துணை இயக்குநராக பதவியேற்க வருகிறார் டி ரென்ஜி. துப்பறிவாளரான இவர், தலைநகரில் நடக்கும் ஃபயர் கிரின் வழக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து எப்படி துப்புதுலக்கி அரச துரோகிகளைக் கண்டுபிடித்து தண்டித்தார் என்பதே கதை.  படத்தில் மெல்லிய காதல் ஒன்றுண்டு. அதுவும் இறுதியில் சில உண்மைகள் வெளியான பிறகு காணாமல் போகிறது. எனவே, பார்வையாளர்கள் வருந்த வேண்டாம். இங்கு ஷெர்லாக் ஹோம்ஸ் போல டி ரென்ஜி எப்படி துப்பறிகிறார், ஒரு மனிதனைப் பார்த்தால் எதையெல்லாம் கவனிக்கிறார் என்பதை பார்த்து வியக்கலாம். ஆச்சரியப்படலாம். படத்தில் அதற்கான நிறைய இடங்கள் உண்டு.  டி ரென்ஜி, தலைநகரில் நீதித்துறைக்கு புதிய துணைத்தலைவராக பணிபுரிய வருகிறார். அவரது பலம் முழுக்க மூளைதான். தற்காப்புக்கலையோ, வாள் பயிற்சியோ கிடையாது. தெருவில் நி்ற்கும்போது ஒரு தேர் வேகமாக வருகிறது. அதிலிருந்து பெட்டி கீழே விழ, அதில் இருந்து வினோத விலங்கு ஒன்று ஓடுகிறது. பார்க்க, உடல் முழுக்க நெருப்பு பற்றி எரிவது போன்று உள்ளது. குதிரை போன்ற உருவம். க

போரில் அடிபட்டு வீழ்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் மாவீரன்!

படம்
  வாரியர் ஃபிரம் ஸ்கை சீனமொழித் திரைப்படம் ஐக்யூயி ஆப்  பனி சூழ்ந்த பகுதி. அங்கு ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து வீரன் ஒருவன் வெளியே வருகிறான். அவனுக்கு தான் யார், தன் பெயர் என ஏதும் நினைவில் இல்லை. அதை அறிய முயல்கிறான். அந்த முயற்சியில் தீய சக்தியை எதிர்கொண்டு வெல்கிறான். இதுதான் படத்தின் கதை.  சொர்க்கத்தில் போரிட்ட வீரன், எதிர்பாராதவிதமாக அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறான். ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் கழித்து விழிக்கிறான். அவனது சக்தி, பூட்டப்பட்டு உள்ளது. பயன்படுத்திய ஆயுதங்கள் காணவில்லை. தான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.  படத்தின் தொடக்கத்தில் துறவி ஒருவருடன் சண்டை போடுகிறான். அவர், அவனின் நான்கு பிறவிகளை தனது சக்தி மூலம் தெரிந்துகொண்டு விடைபெற்று போய்விடுகிறார். போகும்போது, அவனை பூமிக்கு தள்ளிவிட்டு செல்கிறார். நேரே அவன் குளம் ஒன்றில் விழுகிறான். அங்கு சூ நாட்டு  இளவரசி குளித்துக்கொண்டிருக்கிறாள். பிறகு என்ன, அவனைப் பிடித்து கட்டிவைத்து உதைக்கிறார்கள். ஆனால் சென் சான் எனும் அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. தான் எங்கு எந்த கால