இடுகைகள்

வாக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிற்சாலை வேலை என்பது மத்தியதர வர்க்க மக்களைக் காப்பாற்றாது!

படம்
  தொழிற்சாலை வேலை எனும் மாயத்திரை தொழிற்சாலையில் வேலை எனும் மூடநம்பிக்கை தொழிற்சாலையில் வேலை என்பது உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படுகிறது. உண்மையில் இன்று தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்ற குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். பேசுவதுதான் முக்கியம். பேசுவதை செயல்படுத்தினால்தானே பிரச்னை என அரசியல் தலைவர்கள் நினைக்கலாம். அப்படித்தான உலகம் முழுக்க நடப்பு இருக்கிறது. ‘’தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்போது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அடிமை முறை ஆகிய சமூக தீமைகள் ஒழியும்’’ என ஃபெர்னான்டோ கலியானி என்ற சிந்தனையாளர் கூறினார். அவர் இந்தக் கருத்தைக் கூறி 250 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் இதே கருத்தில் கடந்த காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். சிந்தனையாளர் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. ஆனால், அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. காலநிலை மாற்றம், மத்தியவர்க்கத்தின் வேலை, பொருளாதார வளர்ச்சி சுணக்கம், புவியியல் ரீதியாக அரசியல் நெருக்கடி என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதை அரசியல் தலைவர்கள் முன்வைக்க

அறையில் கூடும் வெப்பமும், வடகிழக்கில் அதிகரிக்கும் அரச பயங்கரவாதமும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  6 3.10.2021 அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை. நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி டல்லாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன.  அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது.  ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செ

உணவு, வாக்கு, உடல்பருமன், தூக்கம் என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்கள்தான்! - பழக்கங்களின் தொடர்ச்சி

படம்
              இயற்கையான முறையும் , சூழலின் தாக்கமும் இந்த இரண்டு வார்த்தைகளும் இப்போது அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது . இன்று கிறிஸ்பிஆர் முறையில் மரபணுவைக் கூட வெட்டி ஒட்டி பிறப்புக்குறைபாடுகளை மாற்றிக்கொள்ளமுடியும் . இதற்கான ஆராய்ச்சிகள் தடுப்பூசிகள் தயாரிப்பிலும் கூட பயன்படுகின்றன . பொதுவாக ஒருவரின் குணம் , ஆளுமை , சாப்பிடும் பழக்கம் , திறன் ஆகியவற்றிலும் கூட அவரின் பரம்பரை , சூழல் என இரண்டின் தாக்கமும் உண்டு . இதனை பலரும் மாற்றி மாற்றி விவாதம் செய்வதுண்டு . அதாவது , அவரின் பரம்பரை அப்படி அதனால் திறமையுடன் இருக்கிறார் . மற்றொன்று , பரம்பரையாக இல்லையென்றாலும் சூழலின் அழுத்தத்தில் ஒருவர் தனது திறன்களை வளர்த்துக்கொள்வது . இது இன்றுவரை முடிவில்லாத விவாதமாக செல்கிறது . ஒருவரின் ஆரோக்கியம் , உணவின் முறை என அனைத்துமே மரபணுக்களின் தாக்கம் பெற்றுள்ளது . குற்றவியல் துறையில் பல்வேறு குற்றவாளிகளைத்தான் இந்தவகையில் ஆராய்ந்தனர் . அடிக்கடி குற்றம் செய்பவர்களின் மனநிலையையும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும் ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்

இந்த தேர்தலில் நாங்கள் வெல்ல விரும்புகிறோம்! - கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

படம்
                  கமல்ஹாசன் மக்கள்நீதிமய்யம் தலைவர் நீங்கள் கடந்த மக்களவை தேர்தலில் 3.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றீர்கள் . இப்போது எந்தளவு வாகுகளைப் பெறுவீர்கள் என்று ஏதேனும் திட்டமிடல் உள்ளதா ? நான் எந்த ஆய்வுகளையும் நம்புவதில்லை . மக்களை மட்டுமே நம்புகிறேன் . மக்களுக்கு எங்கள் மீது ஆர்வம் உள்ளது . அதை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் . 2019 ஆம் ஆண்டிலிருந்து என்ன விஷயங்கள் கற்றுக்கொண்டீர்கள் ? அந்த ஆண்டில்தான் அரசியல்வாதியாக நாங்கள் களம் கண்டோம் . நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்துகொண்டிருக்கிறோம் . நாங்கள் மூன்றிலக்க எண்ணிக்கையை மனதில் கொண்டிருக்கிறோம் . நாங்கள் பத்து சதவீத த்தை கடக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொன்னால் அதுவே எங்கள் வெற்றி . நாங்ங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்பதை விட விளையாட்டை மாற்றுவோம் என்று சொல்ல விரும்புகிறேன் . உங்கள் நம்பிக்கை சரிதான் . உண்மையை புரிந்துகொள்ளவேண்டுமே ? நாங்கள் இத்தேர்தலில் வெல்லப்போகிறோம் என்று கூறவில்லை . நாங்கள் வெல்ல விரும்புகிறோம் என்றுதான் கூறுகிறேன் . வெற்றி , தோல்வி என எது நடந்தாலும

ஒரே நேரத்தில் மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம்தான்! - சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்

படம்
                சுனில் அரோரா தேர்தல் ஆணையர் மேற்கு வங்க தேர்தலுக்கு மத்திய அரசின் பாதுகாப்புபடையினரை மாநிலஅரசு அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே ? எங்களுக்குத் தேவையானபாதுகாப்பு படையினரை பற்றி மத்திய அரசிடம் பேசி வருகிறோம் . இன்னும் எண்ணிக்கை முடிவாகவில்லை . இதுபற்றிய தகவலை இன்னும் மாநில அரசிடம் நாங்கள் பேசவில்லை . தேர்தல் பத்திரம் பற்றி உங்கள் கருத்து என்ன ? 2018 ஆம் ஆண்டு பாஜக தவிர பிற கட்சிகள் தேர்தலுக்கு செலவிடுவது பற்றிய புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது பற்றி கூறுங்கள் ? உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எங்கள் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளோம் . தேர்தல் பத்திரம் என்பதை நாங்கள் வெளிப்படையானது என நம்புகிறோம் . இன்றுவரை அதே கருத்தில்தான் உள்ளோம் . பெருந்தொற்று காலத்தில் தேர்தல் செலவுகள் பற்றிய கவனம் தேவை . இதுதொடர்பாக ஹரிஷ்குமார் தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம் . இவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி . அவர்களுடைய அறிக்கை கிடைத்துவிட்டால் இதுதொடர்பாக விரைவில் முடிவெடுத்து விடலாம் . கோவிட் -19 காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேர்