முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு!
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு? அமெரிக்கா. 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று டிரோஸ் 1 என்ற தட்பவெப்பநிலை செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கிடைத்த புகைப்படங்கள் அந்தளவு துல்லியமாக இல்லை. ஆனால், மேகங்கள், புயல்களைப் பற்றிய படங்கள் கிடைத்தன. மொத்தம் எழுபத்தேழு நாட்கள் மட்டுமே செயற்கைக்கோள் இயங்கியது. பிறகு, ஏற்பட்ட மின் விபத்தால் செயலிழந்துபோனது. தட்பவெப்பநிலை பற்றிய முதல் செய்தி லண்டனின் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது. ஆண்டு 1850. தட்பவெப்பநிலை பற்றிய ஒளிப்பரப்பு, விஸ்கான்சின் பல்கலைக்கழக நிலையத்தில் இருந்து 1921ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது. பாரோமீட்டரை கண்டுபிடித்தது யார்? கிரேக்க வார்த்தையிலிருந்து பாரோமீட்டர் வார்த்தை வந்தது. இதன் பொருள், எடை. ராபர்ட் பாயல் என்பவர், பாரோமீட்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாயல் பாரோமீட்டரின் வடிவத்தை மாற்றி அமைத்தார். ராபர்ட் ஹூக் என்பவர், எளிதாக அதன் டயலை பார்க்கும்படி அதை மேலும் மேம்படுத்தினார். 1644ஆம் ஆண்டு பாரோமீட்டரை இவாங்கெலிஸ்டா டோரிசெல்லி என்பவர் கண்டுபிடித்தார். இவர் கலில...