இடுகைகள்

சமூகம்-குழந்தைபிறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை பிறப்பில் சரிவு!

படம்
குழந்தை பிறப்பில் சரிவு ! அமெரிக்காவில் குழந்தை பிறப்புவிகிதம் தொடர்ந்து சரிந்துவருகிறது . கடந்தாண்டு 3.8 பில்லியனாக இருந்த குழந்தைகள் பிறப்பு விகிதம் இவ்வாண்டு இரண்டு சதவிகிதம் சரிந்துள்ளது . இது கடந்த முப்பது ஆண்டுகளில் மிக குறைவான விகிதம் என நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கை கூறியுள்ளது . ஆயிரம் பெண்களுக்கு (15-44 வயது ) 60 குழந்தை பிறப்புகளே நிகழ்ந்துள்ளது . இது 2016 ஆம் ஆண்டைவிட 3 சதவிகிதம் குறைவு .1909 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பிறப்பு விகிதங்களை அமெரிக்கா பதிவு செய்து வருகிறது . பொதுவாக நாற்பது வயதுக்கு கீழுள்ள பெண்கள் பெறும் குழந்தைகளின் விகிதமும் குறைந்துள்ளது அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . " பொருளாதார சீர்குலைவு 2009 ஆம் ஆண்டே ஓரளவு சீர்பட்டாலும் மக்கள் தங்கள் பொருளாதார நிலைமை குறைந்த பயத்திலிருந்து மீளவில்லை என்பதையே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன . பள்ளி , கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் , முழுநேர பணியாளர்கள் என பலரும் வீட்டுக்கடன் , கல்விக்கடன் ஆகியவற்றைக் கட்ட உழைத்துவருவது இதன் பொருட்டே " என்கிறார் ஓஹிய