இடுகைகள்

ஒடிஷா அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் முயற்சி - ஒடிஷா மாநில அரசின் ஆமையைக் காக்கும் தடை!

படம்
  pinterest ஒடிசா மாநிலத்தின்  கேந்திரபாரா மாவட்டத்தில் கதிர்மாதா, எனும் கடல் உயிரினங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1,435 சதுர கி.மீ.ஆகும். இதில் பாதுகாக்கப்பட்ட காடுகள், வண்டல்மண் பரப்பு, மணல் திட்டுகள் உள்ளன. இக்கடல்பரப்பை, 1997ஆம் ஆண்டு கடல் சரணாலயமாக ஒடிஷா அரசு அறிவித்தது. இங்கு அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ஆலிவ் ரிட்லி ஆமைகள். ஆண்டுதோறும் முட்டைகளை இட அதிகளவு எண்ணிக்கையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இங்கு வருகின்றன.  சரணாலயத்திற்கு வரும் ஆமைகளை பாதுகாக்கவென வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வரும் இடங்களில் கதிர்மாதா கடற்புரமும் ஒன்று. ஆண் ஆமைகள், பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கம் முடிந்தவுடன் கடலுக்குள் திரும்பிச்சென்று விடுகின்றன. கருவுற்ற பெண் ஆமைகள் சூரியன் வானில் மறைந்தபிறகு மணல் பரப்பிற்கு முட்டையிட வருகின்றன. நெடுநேரம் யோசித்து முட்டையிடுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. தோராயமாக ஒரு ஆமை,  மணலில் குழிதோண்டி 120 முதல் 150 வரையிலான  முட்டைகளை  இடும். பிறகு, திரும்பி