வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! - பாயும் பொருளாதாரம்
பாயும் பொருளாதாரம் 8 வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! உள்நாட்டு உற்பத்தி குறைவைப் பற்றி பேசினோம் அல்லவா? கும்பமேளாவுக்கு மக்களை ரயிலில் கூட்டிவந்து ஆற்றில் குளிக்கவைப்பதை விட அரசுக்கு நிறைய கடமைகள் பொறுப்புகள் உள்ளன. மும்பையில் முஸ்லீம் நடிகரைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என மதவாத கட்சி வாதிடக்கூடும். பொருட்களின் விலை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். அதை பணவீக்கம் எனலாம். மக்களின் வருமானம் உயர்ந்தால் பணவீக்கம் பற்றி பல்வேறு வர்க்க மக்களும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், வருமானம் குறைந்து வேலைநேரம் அதிகரித்து பொருட்களின் விலையும் விண்ணுக்கு ஏறினால் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். கைக்கூலி ஊடகங்கள் முணுமுணுப்பாக பேசிவிட்டு, கோவில் குடமுழுக்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு, பற்பசையில் உப்பு இல்லை என திசைதிருப்ப பல பிரச்னைகள் உண்டுதானே? விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல்வேறு காரணங்களால் மக்கள் காசை செலவழிக்காமல் சேமித்து வைப்பார்கள். இப்படியான சூழலில் விலைபோகாத பொருட்கள், மெல்ல விலை குறையு...