வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா
தொங்கோடு
சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன், வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை.
கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது. அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல. அவனது பெண்தோழியின் அப்பாதான். இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார். தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான். அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார். ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை, தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார். அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை.
ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான். இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை. பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள். இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்து அழகாக மாறியிருக்கிறாள். ஆனால் அவளுக்கு மாதவன் மீது அன்பு இல்லை. அவனை போலீசில் மாட்டிவிட திட்டம் தீட்டுகிறாள். இந்த நேரத்தில் அங்கு ஊழல், லஞ்சம் வாங்கும் சப் இன்ஸ்பெக்டர் மாற்றலாகி வர வட்டிக்காரருக்கு சூழல் ஏதுவாகிறது. எப்படியாவது மாதவனை சிறையில் தள்ளினால் அவனது நிலத்தை வளைத்து போட நினைக்கிறார். அது சாத்தியமானதா, இல்லையா என்பதை அதிக காமெடி, குறைவான உணர்ச்சிகர சம்பவங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.
மீச மாதவன் என்ற மலையாளப்படத்தின் ரீமேக் இது. இதனால் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. சண்டைக்காட்சிகள் அந்தளவு சரியாக வரவில்லை. கல்யாணிதான் நாயகி எனபதால் வித்யாசாகரின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளன.
காமெடி திருடன்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக