பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

 

 

 

 

 

Edgar Allan Poe adaptations - Graphic Novelty²

 

 

 

எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள்


மருதா பாலகுருசாமி

History, Egypt, Sarcofaag, Pyramid, Farao, Mummy, Mask

இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல், கரடுமுரடான மலைகளின் கதை, எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான். இதில் எலிநோரா மூன்றாவது கதை. புல்வெளி, பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை. இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை. ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள். கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன. காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன.


மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது. அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது, நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது. ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம். காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை. மூளையும், குடலும் உள்ளன. எனவே இந்த மம்மி மனிதர்களுடன் உரையாடுகிறது. அது அங்கிருக்கும் பல்வேறு மருத்துவர்கள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. பின்னர் மெல்ல அதனுடன் பேசுகிறார்கள். அந்த பேச்சில் அவர்கள் என்ன தெரிந்துகொள்கிறார்கள். அந்த மம்மி என்ன விஷயங்களை பேசுகிறது என்பதுதான் சிறுகதையின் முக்கியமான மையம்.

Mood, Past, Old, Winter, Autumn, Orange, Wind, Sky

நூறு சதவீத அமானுஷ்யம் கொண்ட கதை என்றால் கரடுமுரடான மலைகளின் கதையை சொல்லலாம். இதில் வரும் பணக்கார வாலிபரின் வர்ணனை காமெடி கதைபோலத்தான் உள்ளது. ஆனால் அவரின் விநோத தன்மைகள் தொடங்கியவுடனே கதை வேகம் பிடிக்கிறது. பின்னர் அவர் காடு ஒன்றில் நடந்து வந்துவிட்டு டாக்டர் டெம்பிளட்டனிடம் தனது அனுபவத்தை சொல்லும்போது கதை சூடுபிடிக்கிறது. யாருடைய தலையீடும் இல்லாமல் அவரின் அனுபவத்தை டாக்டர் ஏன் கேட்க விரும்பினார் என்பதை நாம் அறியும்போதுதான் திகிலை மனதில் உணர்வோம். டாக்டரின் பல்வேறு குணப்படுத்தும் உத்திகளை முன்னரே சில வரிகளில் சொன்னாலும் இறுதியில் பத்திரிகை செய்தியில் வரும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறது. உண்மையில் அந்த வாலிபர் யார் என்று அறியும்போது டாக்டருக்கு பயமேற்பட்டது ஏன், குறிப்பிட்ட ஓவியத்தை பார்க்க கொடுக்காமல் மறைப்பது என்பது கதையின் முக்கியமான பகுதி.


பாலகுருசாமி மூன்று கதைகளையும் சிறப்பாக மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். மூன்று கதைகளுமே வாசிக்க சிறப்பாக உள்ளன. கதையை விவரிக்கும் முறை எளிமையாக உள்ளது முக்கியமான காரணம் எனலாம்.


கோமாளிமேடை டீம்




 

கருத்துகள்