ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

 

 

 

 

 


 

 


 

 

ஆதரவற்றோருக்கு உணவு!


ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள், ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர். இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர். பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள், வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள். ரபகா கிரண், பன்னி, தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.


கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ், எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும், உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர். இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர். மண்டசா, சோம்பேட்டா, ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது.


இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்கள் வழங்கும் நிதியை உணவு தயாரித்து வழங்கப் பயன்படுத்துகின்றனர். மேலும் மருத்துவசிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும் நிதி சேகரித்து வழங்கியுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கும் உதவி செய்து வருகின்றனர். சேவா சமிதி உறுப்பினர்கள், ரத்த தானம் வழங்குதலையும் இடையறாது செய்து வருகின்றனர். இந்த அமைப்பினால் பயன் பெற்றோரும் கூட பின்னாளில் இதில் இணைந்து சமூகத்திற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்துவருகி்ன்றனர்.



https://www.newindianexpress.com/good-news/2021/jan/28/three-jawans-set-up-food-bank-to-feed-the-hungry-in-andhra-pradesh-2256059.html




கருத்துகள்