கிராமத்திலுள்ளவர்களை திறமைசாலிகளாக உருவாக்கி வருகிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, ஜோகோ
ஶ்ரீதர்வேம்பு
ஜோகோ
கிராமத்தில் நிறுவனத்தை தொடங்கி நடத்தும்போது எது சரியாக இருக்கும், எது வேலைக்கு ஆகாது என நினைக்கிறீர்கள்?
பைபர் ஆப்டிக் வயர்கள் இணையத்தை இணைப்பதால் வீடியோ தரம் சிறப்பாக உள்ளது. அதேசமயம் ஆங்கிலம் சிறப்பாக பேசும் ஆட்களை கிராமத்தில் தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது. நிறைய ஜெர்மன், ஜப்பானிய நிறுவனங்கள் எப்படி ஆங்கிலம் இல்லாமல் கூட உலக சந்தையை அணுகுகிறார்களோ அதேவழியில் நாமும் இந்திய தொழில்வளத்தை உயர்த்தவேண்டும்.
ஸ்டார்ட்அப் என்றாலே நிறைய போட்டிகள் உள்ளன. ஒப்பீடுகள் வருகின்றன. எப்படி சமாளிக்கிறீர்கள்?
நான் நேற்று கூட என் கிராமத்தினருடன் சேர்ந்து 12 கி.மீ. தூரம் நடந்து சென்றேன். இப்போது என்னை பில்கேட்ஸூடன் ஒப்பிடுவீர்களா? இந்த எலிப்பந்தயம் மீது எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு மிகப்பெரும் ஆதாயம் தரும் விஷயம் இதிலிருந்து நீங்கள் விலகி வாழ்வதுதான்.
உங்களுக்கு அரசியலில் சேரும் எண்ணம் உண்டா?
நான் அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நினைக்கவில்லை. ஜோகோவில் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இதற்கு அர்த்தம் நான் அரசியலை மோசமாக கருதுகிறேன் என்பதல்ல. நமது நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்க அரசியல் முக்கியமானது. அதனை எப்படி செய்கிறோம் என்பதில்தான் நிறைய விஷயங்கள் மாறுபடுகின்றன. அரசியலுக்கு இன்னொரு பெயராக போர் என்று சொல்லலாம்.
கிராமத்திற்கு நீங்கள் இடம்பெயர்ந்தது ஏன்?
2019ஆம் ஆண்டு பெருந்தொற்று வருவதற்கு முன்னரே நான் கிராமத்திற்கு வந்துவிட்டேன். இதற்கு முக்கியக் காரணம், நகரங்களில் இடம்பெயரும் மக்களால் ஏற்படும் நெருக்கடிதான். அக்காலகட்டத்தில் தண்ணீர் நெருக்கடியும் அங்கு நிலவியது. பெங்களூருவிலும் மும்பையிலும் நீர் தொடர்பான பிரச்னை இருந்தது. நீரை தூய நீராக்க தொழிற்சாலைகள் நிறுவ வேண்டியிருந்தது. இப்படி கிராமங்களுக்கு நிறுவனங்களை இடம்மாற்றுவது கூட சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் வருவதுதான். இதனால் நாங்கள் அலுவலகத்தை சென்னைக்கு வெளியே தென்காசியில் அமைத்தோம். இப்போது இங்குள்ள ஆட்களை திறமையுள்ளவர்களாக மாற்றி வருகிறோம்.
ஆத்மாநிர்பாரை எப்படி பார்க்கிறீர்கள்?
நாம் இன்னும் இறக்குமதி நாடாகவே இருக்கிறோம். உள்ளூர் சந்தையை நாம் இன்னும் கவனப்படுத்தவே இல்லை. கோவை, கான்பூர் ஆகிய நகரங்கள் லண்டன், சிகாகோ போன்ற சிறப்பு பெற்றவைதான். நாம் இன்னும் வெளிநாடுகளை மையப்படுத்தியே வேலைவாய்ப்புகளை உரு்வாக்கி வருகிறோம். இது எதிர்கால இந்தியாவிற்கு போதுமான வாய்ப்புகளை வழங்காது. இந்தியாவிலுள்ள பெரு நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையை எப்படி விரிவுபடுத்துவது என யோசிக்கவேண்டும். நான் இப்போது இங்குள்ள கோவிலுக்கு சென்றால் கூட அங்கு வந்து வேலைவாய்ப்பு கேட்கிறார்கள். நாம் இங்குள்ள கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது அவசரத் தேவையாக உள்ளது. சீனாவை விட இங்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்கு நம்மால் வேலைவாய்ப்புகளை எளிதாக உருவாக்கித் தரமுடியும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
பங்கஜ் மிஸ்ரா
கருத்துகள்
கருத்துரையிடுக