ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் புதிய வடிவமைப்பிலான சென்சார்! - தொழிற்சாலை, மருத்துவப் பயன்பாடுகளுக்கானது.

 

 

 

 Viber tamil sri lanka viber GIF

 

 


ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் சென்சார்!


பட்டாம்பூச்சியின் இறக்கையில் உள்ள போட்டோனிக் நானோ அமைப்பை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர். தற்போது, அந்த வடிவமைப்பில் ஹைட்ரஜன் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யிலாஸ் சப்ரி, அஹ்மது கன்ட்ஜானி ஆகிய ஆராய்ச்சியாளர்களே இதன் பிரம்மா.


புதிய ஹைட்ரஜன் சென்சார், தொழில்துறையிலும், ஹைட்ரஜன் வாயுவை சேமிக்கும் இடங்களிலும், மருத்துவச்சோதனைகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. புதுப்பிக்கும் ஆற்றல் மூலமான ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கி சேமித்து வருகின்றனர். எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாக வாயுவாக ஹைட்ரஜன் உள்ளது. எனவே, அதன் கசிவை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட சென்சார்களின் தேவை உள்ளது.


தற்போது சந்தையில் கிடைக்கும் சென்சார்களில் உள்ள உலோக ஆக்சைடு அடுக்குகள் ஹைட்ரஜனை கண்டுபிடிக்க உதவுகின்றன. இவற்றில் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. 150 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலையில் செயல்படும் இவை, பல்வேறு வாயுக்களைக் கண்டறியும் திறனில் பல்வேறு வரம்புகளைக் கொண்டுள்ளன.


சப்ரி மற்றும் கன்ஜானி ஆகியோர் தங்களது சென்சார்களில் ஹைட்ரஜனைக் கண்டுபிடிக்க வெப்பத்திற்கு பதில் ஒளியைப் பயன்படுத்தியுள்ளனர். போட்டோனிக் கிரிஸ்டல் இதற்கு உதவுகிறது. இயற்கையாக காணப்படும் ஆப்டிகல் நானோ அமைப்பு இதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. டைட்டானியம் டை ஆக்சைடு வேதிப்பொருளை நானோகோள வடிவில் எலக்ட்ரானிக் சிப்பில் பொருத்தியுள்ளனர். இதற்கு மேல் கோட்டிங்காக டைட்டானியம் பல்லாடியம் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சென்சாரின் திறனை ஊக்குவிக்கும். காற்றில் ஹைட்ரஜன் அளவு அதிகமாக இருந்து தீப்பிடிக்கும் அபாயம் அதிகரித்தால், சென்சாரில் அலாரம் ஒலிக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது.


ஹைட்ரஜன் ஃப்யூல் செல்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், புதிய ஹைட்ரஜன் சென்சார் கசிவைத் தடுக்க பயன்படும். மருத்துவத்துறையில் ஹைட்ரஜன் கசிவு குறைந்தளவு கசிந்தாலும் கண்டுபிடித்து தடுக்க முடியும்.


https://physicsworld.com/a/hydrogen-sensor-is-inspired-by-butterfly-wings/


நீ எழுதியது இயற்பியல் கட்டுரை என்று கூறிவிடாதே என இதழாசிரியர் நிராகரித்த கட்டுரை.










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்