அடுத்த ஆண்டில் 50ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சி புரோகிராமிங் மொழி! - மீண்டும் பிரபலமாவது எப்படி?
கணினிமொழி சி!
அடுத்த ஆண்டு சி மொழி, கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றது. இன்று நாம் பயன்படுத்தும் டிவி, வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் ஓவன், ஸ்மார்ட் பல்புகள், காரின் டாஷ்போ்ர்டு ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட் ஓஎஸ்கள் அனைத்துக்குமே அடிப்படை சி மொழிதான்.
2015ஆம் ஆண்டு ஜாவா மொழியிடம் தனது பிரபலத்தை சி மொழி பறிகொடுத்து தற்போது மீண்டிருக்கிறது. இணையம் சார்ந்த கருவிகளின் விளைவாக 2017வாக்கில் சி மொழி முன்னுக்கு வந்திருக்கிறது. 1972ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த டென்னிஸ் ரிட்சி என்பவர் சி மொழியைக் கண்டுபிடித்தார். 1980வாக்கில் சி மொழி வணிகத்திற்கு கூட பயன்படத் தொடங்கிவிட்டது. இதனை லோலெவல் லாங்குவேஜ் என்று கூறுகிறார்கள். அப்போது ஹை லெவல் என்றால் ஜாவா, பைத்தான் ஆகியவை வரும். கணினியின் கெர்னல் எனும் பகுதி சி மொழியால் எழுதப்பட்டு வருகிறது. இன்று ரஸ்ட், சி பிளஸ் பிளஸ் மொழியில் பல்வேற பரிசோதனை முயற்சிகளை புரோகிராமர்கள் செய்து வருகிறார்கள். ஆனாலும் கூட சி மொழியின் எளிமையும் திறனு்ம் அதற்கு கைகூடவில்லை.
ஒரு செயலை செய்வதற்கான கோடிங்கை சி மொழியில் எழுதும்போது குறைவான வரிகளே வரும். இதன் மூலம் கணினியின் நினைவகம் குறைவாவே செலவாகும். இதன் காரணமாகவ சி மொழி கட்டுக்கோப்பாகும் வேகமாகவும் ஆற்றல் வாய்ந்த தாகவும் உள்ளது. கட்டுக்கோப்பான இதன் தன்மையால் பல்வேறு இணையத்தோடு இணைத்து பயன்படுத்தும் பொருட்களில் பயன்படுத்த ஏதுவாக உள்ளது. புரோகிராம் வேகமாக செயல்படவும் இது ஒரு முக்கியக்காரணம். இதில் பல்வேறு அம்சங்களை காலந்தோறும் இணைத்துக்கொண்டே வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 30 ஆயிரம் சி புரோகிராமர்கள் இருக்கின்றனர். ஆனாலும் கூட புதிதாக 6 ஆயிரம் பேருக்கான தேவை உள்ளது. தற்போது கல்லூரி மாணவர்கள் மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கு முயல்வதால், ஜாவா, சி++ உள்ளிட்ட மொழிகளைக் கற்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்தியா உற்பத்தி செய்யவேண்டுமென்றால் சி மொழி புரோகிராமர்கள் அதிகம் தேவை.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக