நிர்வாணக் காட்சிகளை இப்போது ஆட்சேபிப்பவர்களை விட வாவ் சொல்பவர்கள்தான் அதிகம்! - மிலிந்த் சோமன்
மிலிந்த் சோமன்
திரைப்பட நடிகர், மாடல்.
நீங்கள் டிவியில் எ மவுத்புல் ஸ்கை என்ற தொடரில் நடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. டிடி நேஷனலில் வெளியான முதல் ஆங்கிலத் தொடர் அது. இந்தியாவில் பொழுதுபோக்கு எப்படி மாறியுள்ளது என நினைக்கிறீர்கள்?
இன்று வாய்ப்புகளும் பெருகியுள்ளன. அதைப்போலவே ஓடிடி பிளாட்பாரங்களில் கதைகளை சுதந்திரமாக கூறுவதற்கான இடமும் உள்ளது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராண கதைகளை தாண்டி இன்று புதிய கதைகள் வருகின்றன. பிரமாதமான புதிய நடிகர்களின் வருகையும் பொழுதுபோக்கு தளத்தை மாற்றியுள்ளது.
கடந்த ஆண்டில் நீங்கள் படித்த பிடித்தமான புத்தகம் ஒன்றைச் சொல்லுங்கள்.
நான் உங்களுக்கு நான் எழுதிய மேட் இன் இந்தியா நூலை சொல்லுவேன்.
நீங்கள் அண்மையில் கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தீர்கள். இதற்கு என்னவிதமான எதிர்வினைகளை நீங்கள் எதிர்பார்த்தீர்கள்?
நான் சில மாதங்களுக்கு முன்னர் 1995ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த விளம்பரம் ஒன்றின் நாளிதழ் பதிப்பை வெளியிட்டிருந்தேன். அதில் நடித்த நானும் இன்னொருவரான மது சாப்ரேயும் நிர்வாணமாக இருப்போம். இன்று அதெல்லாம் குற்றமில்லை. யாரும் அதனை பெரியளவு கவனிக்க மாட்டார்கள் என கமெண்ட் கிடைத்தது. கடற்கரை புகைப்படத்திற்கு கூட நிறையப் பேர் என்னை விமர்சிக்கவில்லை. அவர்கள் வாவ் என்று பதிவிட்டிருந்தனர். ஆனால் சிலர் பூனம் பாண்டே இதுபோல செய்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார் என்று கூறியிருந்தனர்.
பராஸ்பூர் தொடரின் காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளானதே?
ஒரு தொடர் என்பது பார்ப்பவர்களுக்கு இடையில் விவாதத்தை ஏற்படுத்தவேண்டும். இல்லையெனில் அது வெற்றி பெறாது. இதைப்போலவே ஃபோர் மோர் ஷாட்ஸ் என்ற தொடருக்கும் கூட இது இந்தியக் கலாசாரமில்லை என்று விமர்சனங்கள் வந்தன. நாம் திரைக்கும் மறைவில் பல்வேறு விவகாரங்களை செய்கிறோம். இவற்றை நாம் இல்லையென்று சொல்லமுடியாது. ஓடிடியில் எந்த கதையும் சிறியது பெரியது என்று வித்தியாசப்படுவது கிடையாது.
நீங்கள் பராஸ்பூரில் நடிக்கும் போரிஸ் பாத்திரம் பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் அந்த பாத்திரை ஒரு மனிதராக காட்ட முயல்கிறோம். வெறும் உடல்மொழி, அல்லது ஒப்பனை காட்சிகளால் அந்த பாத்திரத்தை காட்ட நினைக்கவில்லை. நாங்கள், அவர்கள் என சமூகம் குறிப்பிட்ட பாலினத்தவர் மீது காட்டும் புறக்கணிப்பை நாங்க்கள் காட்சிபடுத்துகிறோம்.
இந்தியா டுடே
சுகானி சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக