கருப்பின ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளராக அறியப்பட நினைக்கிறேன்! - எழுத்தாளர் ஸ்டெபானி எல் பிளேர்

 

 

 

 

Guyanese-American author celebrates Caribbean identity in ...

 

 

 

ஸ்டெபானி எல் ப்ளேர்


குயானிஸ் அமெரிக்க எழுத்தாளர்


உங்கள் நூலை பேஸ்புக் வழியாக அறிமுகப்படுத்தினீர்கள். அதில் சாக்லெட் நிறத்தில் உள்ள என்னைப்போன்ற பெண்ணின் கதைகளை யாரும் படித்திருக்க மாட்டீர்கள் என்று சிறுமி கூறுவது போல அமைத்திருந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?


நான் ப்ரூக்ளினில் வளர்ந்தேன். அங்கு உள்ள அழுத்தம் வேறுவிதமானது. உங்களுக்கு நீங்கள் அங்கு குடியேறியுள்ளீர்கள் என்பது எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கும். அச்சூழலில் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த நேரமில்லாதபடி தினசரி வேலைகள் நெருக்கும். பொதுவாக அங்கு வாழும் வெளிநாட்டினர் அனைவருமே ஏழைகள் என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு. என்னைப் பொறுத்தவரை நிறம், இனம், வேறுநாடு என்பதைச் சார்ந்து பிறர் என்னைப் பற்றிய முன்முடிவுகளை மனதில் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளை கரீபிய குடும்பங்கள் நிறைய எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்க மதிப்புகளை கரீபியர்கள் ஏற்றுக்கொள்வதிலும் தடுமாற்றங்கள் உள்ளன.


உங்கள் குடும்பத்தில் நிலைமை எப்படி இருந்தது? உங்களையும் கரீபிய குடும்பத்தினர் அமெரிக்க கண் கொண்டு பார்த்தார்களா?


எனக்கு அமெரிக்காவில் உள்ள நிலைமையை புரிந்துகொண்டு வாழ்வது கஷ்டமாக இல்லை. அங்கு வாழும் கரீபிய குடும்பத்தினர் வலிமையான சுவர்களை அமைத்துக்கொண்டு குடும்பத்தினருக்காக உழைக்க வேண்டியுள்ளது. அவர்கள் பிறரின் கருத்துகளை கேட்டுக்கொண்டிருக்கவில்லை

 

நீங்கள் உங்களை என்னவாக கருதுகிறீர்கள்? ஆப்பிரிக்க அமெரிக்கர் அல்லது கரீபியர். எது உங்களை அவர்களுக்காக குழந்தைகள் நூல் எழுத தூண்டியது?


அமெரிக்காவில் கரீபிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளை அமெரிக்கர்கள் கரீபியன் என்றே கருதுகிறார்கள். ஆனால் கரீபிய பெற்றோர் அவர்கள் அமெரிக்கர்கள் என்று நினைக்கின்றனர். இந்த கருத்து முரண்பாடுகளுக்கு இடையில்தான் தான் நான் ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தைகளுக்கு குழந்தை இலக்கியத்தை கற்பிக்க நினைத்தேன். என்னை எந்த அடையாளத்திற்குள்ளும் நான் அடைத்துக்கொள்ளவில்லை.


நீங்கள் உங்களை ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளராக கருதுகிறீர்களா?


நான் எப்போதும் அப்படி கருதியதில்லை. வேறுவழியில்லாத நிலையில் கருப்பின ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளராக அறியப்பட்ட நினைக்கிறேன்.


குழந்தைகள் இதனை வேறுவிதமாக பார்த்தால் என்ன செய்வீர்கள்?


நீங்கள் யார் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்களுக்குள் உள்ள தனித்துவம் உங்களை பிறருக்கு யாரென்று காட்டும்.


நான் பள்ளியில் படிக்கும் போது பல்வேறு மொழிகளைக் கொண்ட, தேசங்களைச் சேர்ந்த இனங்களை சேர்ந்த மாணவர்களுடன் படித்தேன். அமெரிக்காவில் இது சாத்தியமானது. நாளை இச்சூழ்நிலை அனைவருக்கும் கிடைக்கும் என்று கூற முடியாது.


நீங்கள் எழுதிய நூலின் நோக்கம் என்ன?


உலகெங்கும் உள்ள கரீபிய குடும்பங்கள் இதனை வாசிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதைப்படித்த ஒருவர் இதனை சீரிஸ் போல எழுதலாமே என்று சொன்னார். இப்போதைக்கு நேர்மறையான நிறைய விமர்சனங்கள் கிடைத்துள்ளன. பார்ப்போம்.


கருத்துகள்