வாராக்கடன் வசூலிப்பில் பேட் பேங்க் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது!
பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி தற்போது பேட் பேங்க் என்ற கான்செப்டை கையில் எடுத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இதனை பலர் கூறியபோதும் மறுத்து வந்த ரிசர்வ் வங்கி தற்போது இதனை செயல்படுத்த என்ன காரணம் என்று பார்ப்போம்.
பேட் பேங்க் என்பது வணிக வங்கிகள் வழங்கிய வாராக்கடன்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்காக அமைக்கப்படும் வங்கி. இந்த வங்கி யாருக்கும் கடன்களை வழங்காது. யாரிடமும் டெபாசிட்களைப் பெறாது. கடன்களை குறிப்பிட்ட கால அளவில் திரும்ப பெறும் நடவடிக்கைகளை செய்யக்கூடியது. வணிக வங்கிகளின் இருப்பில் உள்ள வாராக்கடன்களை திரும்பப் பெற்றுத்தர பேட் பேங்க் உதவுகிறது. வாராக்கடன்களை வாங்கிய அளவுக்கு குறைந்தாலும் முடிந்தவரை வேகமாக மீட்க முயல்கிறது.
முன்னார் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், பேட் பேங்க் முறைக்கு தனது நூலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை இன்னுமொரு நிறுவனம் அமைத்து அதற்கு மாற்றிவிட்டால் எப்படி நிலைமை முன்னேறும் என்று எழுதியிருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மெலன் பேங்க், 1988ஆம் ஆண்டு பேட் பேங்க் முறையை அமல்படுத்தியது. இதன் வெற்றியால் ஸ்வீடன், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் இம்முறை பரவியது.
இந்தியாவுக்கு இந்த முறை தேவையா என்று கேள்விகள் எழலாம். ரகுராம் ராஜன் காலத்தில் வங்கிகள் வழங்கும் கடன்கள், அதன் செயல்பாடு பற்றி அறிய ஆர்பிஐ, அசெட் குவாலிட்டி ரிவ்யூ என்ற முறையை அமல்படுத்தியது. அப்போது வங்கிகளின் ஆண்டு அறிக்கை சிறப்பாக இருந்தாலும் வாராக்கடன்களால் வங்கிகள் உள்ளுக்குள் நலிவுற்று இருப்பது தெரியவந்தது. பேட்பேங்க் முறை உருவானாலும் கூட நடைமுறை விதிகள் சார்ந்த சிக்கலால் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிடாது. அதாவது வாராக்கடன்கள் குறைந்துவிடாது.
பெருந்தொற்று காரணமாக வங்கிகளில் வாராக்கடன் பெருகியிருக்கும் என ஆர்பிஐ பயப்படுகிறது. மேலும் கடன் தவணை சலுகைகள் இதனை ஊக்குவித்திருக்கும் என்பதால் புதிய முறையில் வாராக்கடனை கையாள நினைக்கிறது.
ஆர்பிஐக்கு பேட் பேங்க் ஐடியா மீது பெரிய நம்பிக்கையில்லை. ஆனால் இப்போது பெருகிவரும் வாராக்கடன்களை மீட்பதற்காக புதிய முறையை நம்புகிறது. வைரால் ஆச்சாரியா, ஆர்பிஐயின் முன்னால் துணை ஆளுநராக இருந்தவர் இதற்கு இரண்டு வழிகளை முன்வைக்கிறார். ஒன்று கடன்களை திரும்ப மீட்க தனியார் சொத்து மீட்பு நிறுவனத்தை நாடவேண்டும். இரண்டாவது, தேசிய சொத்து மேலாண்மை நிறுவனத்தை தொடங்கி கடன்களை நிர்வகிக்க வேண்டும் என்கிறார்.
பேட் பேங்கை முதலில் அரசு பணம் கொடுத்து தொடங்கினாலும் இதில் தனியார் கடன் நிறுவனங்கள் முதலீடு செய்தால் இந்த வங்கி கடன்களை சிறப்பாக பெற வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் கூட இந்த முறையில் டிரபிள்டு அசெட் ரிலீப் புரோகிராம் முறை செயல்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன்களில் அதிகம் சிக்கி வருவது ஆபத்தானது. விரைவில் செயல்படாவிட்டால் வங்கிகள் திவாலாகிவிடும் அபாயம் உள்ளது.
இந்திய வங்கிகள் அசோசியேஷன், பேட்பேங்க் முறையை வாராக்கடனை வசூலிக்க அமைக்க வலியுறுத்தி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஜார்ஜ் மேத்யூ, சன்னி வர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக