காட்டிற்குள் சென்று தான் யார் என்பதை நிரூபித்துக்காட்டும் சிங்கம்! - வைல்ட் - டிஸ்னி
வைல்ட்
Directed by | Steve "Spaz" Williams |
---|---|
Produced by | Clint Goldman Beau Flynn |
Screenplay by | Ed Decter John J. Strauss Mark Gibson Philip Halprin |
Story by | Mark Gibson Philip Halprin |
சாம்சன் என்ற சிங்கம், ரையான் என்ற மகனுடன் வனவிலங்கு காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றிருக்கிறது. ரையோன் குட்டி சிங்கமாக இருந்தாலும் அதற்கு கர்ஜனை செய்யவருவதில்லை. பூனை போல மியாவ் என்றுதான் குரல் வருகிறது. இதனால் ரையோன் மனம் தளர்ந்து போகிறது. கூடவே இருக்கும் பாம்பு, ஒட்டகச்சிவிங்கி, கரடிகளின் கிண்டல் வேறு மனதைக் காயப்படுத்துகிறது.
இதனால் வைல்ட் எனும் காட்டிற்கு சென்று வாழ்ந்தால்தான் தன் இயல்பைப் பெறமுடியும் என நம்புகிறது ரையான் இதற்கான முயற்சியில் தவறுதலாக வண்டி ஒன்றில் ஏற, அந்த வண்டி நகருக்கு செல்கிறது. தன் மகனை தேட சாம்சன் தனியாகத்தான் புறப்படுகிறார். ஆனால் அவரது இம்சை நண்பர்களும் உடன் வர அவர்களின் கோளாறான கோக்குமாக்கு வேலைகளை சமாளித்து எப்படி சாம்சன் தனது மகனைக் கண்டுபிடித்தது என்பதுதான் கதை.
படத்தைப் பார்த்து பலபேருக்கு மடகாஸ்கர் படம் நினைவுக்கு வரலாம். படத்தின் முக்கியமான புள்ளி, அப்பா, மகன் உறவுதான். மகனைத்தேடும்போதுதான் தான் யார் என்பதையும் சாம்சன் மெல்ல உணர்கிறது. தான் இதுவரை தன் மகனுக்கு சொன்ன கதைகளில் உள்ள நாயகன் தான்தான் என்பதை மெல்ல உணர்ந்து காளையை அடக்கி காளைக் கூட்டத்தை நண்பனாக்கி கொள்கிறது. தனது நண்பர்களையும் கூட ஆபத்திலிருந்து காப்பாற்றி மகனையும் மீட்கிறது. படத்தின் இறுதிக்காட்சி இதுதான்.
படத்தில் சாம்சன் சீரியசான நாயகன். எனவே அணில், ஒட்டகச்சிவிங்கி, கரடி மூன்றுமே காமெடி போர்ஷனை எடுத்துக்கொண்டு நம்மை சிரிக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கு கதை சொன்னால் கூட பொயபட்டி சீனுபோல பிரமாண்ட ஹீரோயிசமாக ஒருவரைக் காட்டாமல் யதார்த்தமாக சொன்னால்தான் அவர்களால் சூழ்நிலையை சமாளிக்க முடியும். இல்லையென்றால் மேலேயிருந்து ரட்சகன் நம்மை காக்க வருவான் என பிரார்த்தனை செய்யும் கூட்டம்தான் உருவாகும் என்பதை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறது படம்.
குடும்பமே மகிழ்ச்சி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக