ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க வந்ததில் எந்த அரசியல் நோக்கமுமில்லை! கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்

 

 

 

 

 

 

 

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் கண்டுரசித்த ராகுல் காந்தி ...

 

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்


கே.எஸ். அழகிரி


ராகுல்காந்தி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளதே? ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது..?


ஜல்லிக்கட்டிற்கு பிரச்னை வந்தது 2014இல்தான். உச்சநீதிமன்றம் இதற்கான தடை ஆணையை பிறப்பித்தது. பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து மனுவும் பதியப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர் விளையாட்டு தொடர்வதற்கான முயற்சிகளை செய்தது. அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்காது.


ஆனால் முன்னாள் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எதிர்ப்பதமாக கருத்துகளை கூறுகிறாரே?


இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன. 1960இல் உருவாக்கப்பட்ட விலங்குகளை துன்புறுத்தும் சட்டம் தொடர்பானவை அவை. ஜெயராம் ரமேஷ் கூறிய கருத்துகள் சட்டத்தின்பாற்பட்டவை. கேபினட் கமிட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் விஷயத்தை ஆதரிக்கவில்லை. இதற்கு காரணம் திமுக, மாநில அரசிடமிருந்து வந்த அழுத்தங்கள்தான். கலைஞர் மு.கருணாநிதி ஜல்லிக்கட்டு எந்த பிரச்னையுமின்றி நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்தபிறகுதான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. காரணம், அவர்கள் பசுக்களை கொடுமை செய்கிறார்கள் என்று கூறும் ஆர்எஸ்எ்ஸ்சின் பேச்சைக் கேட்கிறார்கள்.


ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.ஜல்லிக்கட்டு பற்றி அவரின் கருத்து என்ன?


அவர் இதில் பயன்படுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா என்று கேட்டார். இதில் காளைகளுக்கு எந்த பாதிப்புமில்லை. மனிதர்கள்தான் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயம்படுகிறார்கள் என்று சொன்னேன். விளையாட்டைப் பார்த்தவர் மனிதர்கள்தான் காயம்படுகிறார்கள் என்று ஒப்புக்கொண்டு அதனை ஆர்வமாக கவனித்தார். இதில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை.


அவர் தமிழகத்திற்கு வந்து பார்வையிட்டது காங்கிரஸிற்கு உதவுமாழ


அவரது வருகை இணையத்தில் வைரலானது. ஜல்லிக்கட்டு பற்றிய அவரது கருத்துகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


திமுக தன்னை இந்துகளுக்கு எதிரான கட்சியல்ல என்று கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?


ஒரே கடவுள் ஒரே தேவன் என்று திமுக நிறுவனர் சி.என். அண்ணாதுரை முன்னமே கூறியுள்ளார். திமுக கட்சியினரை குறிப்பிட்ட இனத்தவருக்கு எதிராக நிறுத்துவதை தடுக்க அவர்கள் இப்படி கூறியுள்ளனர். திமுக குறிப்பிட்ட எந்த மத த்தினருக்கும் எதிராக பிரசாரம் செய்த்து கிடையாது. பாஜக திமுகவை பற்றி இந்துகளுக்கு எதிரான கட்சி என்று பேசி வருகின்றனர்.


தி இந்து

பி.கோலப்பன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்