கட்டுமானக்கலையில் சாதனை படைத்த ரோமானியர்கள்!
இன்று அனைத்து அரசியல், கலை தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் ரோம்தான் மையமாக உள்ளது. அங்கு கட்டப்பட்ட கட்டுமானங்கள், போர், அரசியல் சார்ந்த நூல்கள், அறிவியல் என முன்னரே நிறைய சாதித்த நாடு அது. கொலோசியம் கட்டுமானம் பற்றி அறிவோம்.
சாம்பல் கலந்த சிமெண்ட் கொலோசியத்தை கட்ட பயன்பட்டது.
கொலோசியம் என்ற வார்த்தை கொலோசஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது நீரோ மன்னர் கட்டிய ஏராளமான சிலைகள் கொண்ட நகரத்தை குறிக்க பயன்பட்டது.
50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அமர்ந்து பார்க்கமுடியும் அரங்கம்தான் கொலோசியம். சூரிய வெப்பம் மக்களைத் தாக்காமல் இருக்க வெலேரியம் எனும் அமைப்பு பயன்பட்டது.
இங்கு கொலைவெறியாட்டத்தை பார்க்க வரு்ம் பார்வையாளர்களுக்கு எண்களை அச்சிட்ட டோக்கன்களை டிக்கெட்டாக கொடுத்தார்கள். அவர்களை ஒழுங்குமுறைப்படுத்த மரத்தடுப்புகளும் இருந்தன.
மைதானம் அதற்கு கீழே கைதிகளை அடைத்து வைப்பதற்கான இடம், அவர்களை மைதானத்தில் வெளியே விடுவதற்கான பற்பல வாயில்கள் என கட்டுமானக் கலைஞர்ளள் இதனை உருவாக்கியிருந்தன.
போர்
நிலமோ நீரோ அனைத்திலும் ரோமானியர்கள் முன்னிலையில் இருந்தனர். ஐரோப்பாவின் பல்வேறு நிலப்பகுதிகளை இவர்கள் ஊடுருவி ஆக்கிரமித்தனர். இதில் ஆப்பிரிக்காவும்,ஆசியாவும் கூட அடக்கம். ஆயுதங்கள், பாதுகாப்பு தந்திரங்கள், படைகளை குறிப்பிட்ட வடிவில் அமைப்பது என நேர்த்தியை கற்றிருந்தது போரில் உதவியது.
படைப்பிரிவு 4500 பேர் என பிரிந்து இருந்தனர். போரில் எப்படி அவர்கள் தொடர்ச்சியாக வென்றார்கள் என்றால் அதற்கெனவே அவர்கள் பயிற்சிபெற்றிருந்தார்கள். நாட்டின் மீதான விசுவாசத்துடன் அவர்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். படைவீரர்களுக்கு சாம்பாரில் பருப்பு இல்லை, சப்பாத்தியில் கோதுமை இல்லை என குறை வராதபடி நல்ல சம்பளத்தை அளித்தனர். நாட்டில் அவர்களுக்கான சமூக மதிப்பும் சிறப்பாக இருந்தது.
குதிரைப்படை வீரர்களுக்கு முக்கிய வேலை யாராவது தப்பி ஓட முயன்றால் அவர்களை குதிரையில் பாய்ந்து சென்று பிடித்து நசுக்குவதுதான்.
ரோம நாட்டை சேராதவர்களும் கூட கூடுதல் காலாட்படையில் இருந்தனர். இவர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் குடியுரிமை வழங்கப்பட்டது.
காலாட்படை வீரர்களின் சராசரி வயது 17 முதல் 45 வரை. இதற்கு ரோமநாட்டைச்சேர்ந்தவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செஞ்சுரியன் என்பவர்கள் எண்பது வீர ர்களுக்கு தலைவர்கள். இவர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முழு பொறுப்பு ஏற்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக