தேசத்தந்தையின் உண்மை, வலிமை, மனிதநேயத்தை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்! - ஜவாகர்லால் நேரு

 

 

 


 

 

 

 

 

நியமன நாள்


நமது நியமன நாளை விதி உருவாக்குகிறது. அதை இந்திய மக்களான நாம் சுதந்திரமான நாட்டை உருவாக்கி அதற்காக நிலைநிறுத்தவேண்டும். இறந்த கால சம்பவங்கள் நாம் இப்போது செய்யவிருக்கும் பல்வேறு செயல்களில் எதிரொலிக்கலாம். நாம் இந்தியாவில் வாழும் வாழ்க்கையை வரலாறாக பிறர் எழுதுவார்கள். இதில் திருப்புமுனை என்று முன்னர் கூறப்பட்டவையெல்லாம் இறந்த காலமாக மாறும்.


விதி இயற்றப்படும் முக்கியமான தருணம் இது. ஆசியா மற்றும் உலகத்திற்கானது. கிழக்கில் புதிய விண்மீன் உதிக்கிறது. அதன் பின்னணியில் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளது. நமது நம்பிக்கை ஏமாற்றப்படாதபோது, விண்மீன் அஸ்தமிக்கும் நிலை ஏற்படாது.


நமது மக்களைச் சுற்றிலும் சோக மேகங்கள் இருந்தாலும், வேறு பிரச்னைகளால் வாடி நின்றாலும் கூட நாம் பெற்றுள்ள சுதந்திரத்தைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவேண்டும். நாம் இந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசத்தந்தை, சுதந்திரத்தை வடிவமைத்தவர், நம்மைச்சுற்றி இருந்த இருளை நீக்கியவரை நினைவுகூரவேண்டும். நாம் அவரைப் பின்பற்றாத மக்களாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த தலைமுறை இந்த செய்தியை நினைவுகொள்ளவேண்டும். அதனை தங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். தேசத்தந்தையின் மனிதநேயம், உண்மை, வலிமை ஆகியவற்றை எப்போதும் இதயத்தில் வைத்து நினைவுகூரவேண்டும். சுதந்திரத்தின் வெளிச்சத்தை புயலே அடித்தாலும் அணைய விட்டுவிடாமல் காப்பாற்ற வேண்டும். பாராட்டுகளுக்கு, அங்கீகாரங்களுக்கு ஏங்காமல் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அரசியல் எல்லை என்பதைத் தாண்டி நமது சகோதர சகோதரிகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அவர்களை நாம் நம்முடன் வைத்திருக்கவேண்டும். அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என அனைத்தையும் ஒன்றுபோலவே நாம் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.


எதிர்காலத்தில் இந்தியாவிற்கென நான் என்ன செய்யவிருக்கிறோம்? சுதந்திரத்தையும், வாய்ப்புகளையும் விவசாயிகளுக்கும், பணியாளர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் வழங்க வேண்டும். இவர்களுக்கு ஏற்படும் வறுமை, புறக்கணிப்பு, நோ்ய்களை அகற்ற நாம் இடையறாது போராட வேண்டும். இந்தியாவை நாம் ஜனநாயக நாடாக உருவாக்கி சமூக பொருளாதார அமைப்புகளாக வளர்த்தெடுக்க வேண்டும். இதன்மூலம் இந்நாட்டிலுள்ள அனைத்து ஆண், பெண் என அனைவருக்குமே நீதியை வழங்கவேண்டும்.


நமக்கு கடினமான உழைப்பு காத்திருக்கிறது. நமது நாட்டை வளமாக்கி விதி நிர்ணயித்துள்ள நிலைக்கு கொண்டு செல்லும்வரை நம் அனைவருக்கும் ஓய்வு கிடையாது. இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் சிறந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்வதற்கான தகுதி உள்ளது. இந்தியாவிலுள்ள மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவருமே இந்தியாவின் பிள்ளைகள்தான். அவர்களுக்கு இந்த நிலத்தில் அனைத்து உரிமைகளும் உண்டு. அவற்றை ஏற்கவும் மறுக்கவும் கூட உரிமைகள் உள்ளன. நாம் என்றும் இனவாதம் சார்ந்த கருத்துகளையும், குறுகிய மனப்பான்மை சார்ந்த விஷயங்களை நாம் ஊக்குவிக்க கூடாது. எந்த ஒரு சிறந்த நாடுமே குறுகியவாத கருத்துகளையும் செயல்களையும் ஏற்றுக்கொள்ளாது. அந்நாட்டு மக்களும் அப்படியேதான் இருப்பார்கள்.


இந்திய நாட்டின் மக்களாகிய நாம், வாழ்த்துகளை பிறருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக நின்று அமைதி, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்காக உழைக்கவேண்டும்.


நாம் அனைவரும் ஒன்றாக வாழும் தாய்நிலமான இந்தியா, பல்வேறு கலாசாரங்களைக் கொண்டுள்ளதோடு அனைத்து விதமான மக்களும் அதற்கான சேவைக்கு எப்போதும் தங்களை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். ஜெய் ஹிந்த்.


வின்சென்ட் காபோ










கருத்துகள்