இடுகைகள்

மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல் ஆளுமை பிறழ்வு வரலாறு

படம்
  இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.  சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது.  இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவா