இடுகைகள்

சுயநலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் அவர்களுக்கு எந்த உரிமை

மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி

படம்
  பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார். உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல்.   இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையா

கைநடுக்கத்தை குறைக்க காலத்தை புதிதாக மீண்டும் தொடங்கினால்... வேலி ஆஃப் லாண்டெர்ன்

படம்
  வேலி ஆஃப் லாண்டெர்ன் அனிமேஷன் ஒரு கிராமம். அந்த கிராமத்தின் சிறப்பு, உயரமாக அமைக்கப்பட்ட இடிபாடுகளைக் கொண்ட கோட்டை. கோட்டை அமைந்துள்ள கிராமத்தில் ஆலிஸ்டைன் என்ற வயதான பெண்மணி, அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் வசிக்கிறாள். வயதான பாட்டிக்கு பார்க்கின்சன் நோய் வந்துவிடுகிறது. அது பாரம்பரியமாக வரும் குடும்ப நோய். தான் ஆரோக்கியமாக பிறருக்கு பயனுள்ளவளாக இருக்கவேண்டுமென நினைக்கிறாள். எனவே, ஊரில் உள்ள பழங்கதையில் சொல்லும் விஷயத்தை செய்கிறாள். ஆண்டை மாற்றி வைப்பது. இதன்மூலம் மக்களுக்கு ஒரே ஆண்டு திரும்பத் திரும்ப வருகிறது. ஆலிஸ்டைன் பாட்டி, ஆண்டுதோறும் வரும் விளக்கு திருவிழாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த பணத்திற்கு காகித விளக்குகளை செய்து கொடுக்கிறாள். அதை மனதிருப்திக்காக செய்கிறாள். கிடைக்கும் பணம் என்பது செய்யும் உழைப்பிற்கு போதுமானதல்ல. அவளது குடும்பம் பாரம்பரியமாக செய்யும் வேலை அது. ஆனால் பார்க்கின்சனால் ஏற்படும் கைநடுக்கம், விளக்கை ஏற்றுவதற்கு கூட விடுவதில்லை. தடுமாறுகிறாள். ஆலிஸ்டைன் எதற்கு இதை திரும்ப திரும்பச் செய்கிறாள் என்றால், அவளுக்கு கைநடுக்க நோய் திரும்பத்

சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது. நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று

சுயநலமான காரியக்காரர்களால் நண்பருக்கு ஏற்பட்ட துயரம்!

படம்
  சில உறவுகளை நாம் தேடிச்செல்கிறோம். சில உறவுகள் நம்மைத் தேடி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை நம்மைத் தேடி வரும் உறவை முக்கியமாக பார்க்கிறேன். அதில் நாம் ஏற்பவையும் குறைவுதான். அனைத்தும் நமது குணநலன்களுக்கு ஏற்ப இருப்பதில்லை. கார்ட்டூன் கதிரை நான் முதல்முறையாக முரசு அலுவலகத்தில் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. இவரின் திறமையை நாம் நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கு இருந்த சூழலில் அவருக்கு அதிக நம்பிக்கையைத் தர முடியவில்லை. ஆனால் அவரின் வலைப்பூ சென்று சோதித்துப் பார்த்தேன். நான் அப்படி செய்தது ஆசிரியர் தூயவருக்கு பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை. இப்படியொரு திறமைசாலி ஏன் உளுத்துப்போன இதழுக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்போது கார்ட்டூன் கதிரவனுக்கு, சாதி சார்ந்து இயங்கும் பத்திரிகையில் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை தோன்றியிருக்கிறது. பின்னாளில் அது தவறான முயற்சி என உணர்ந்திருப்பார்.  கார்ட்டூன் கதிரவன் பதினைந்து நாட்களில் மயிலாப்பூரில் உள்ள தினசரியில் வேலைக்கு சேர்ந்ததைப் ப

கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பரஸ்பர உதவி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன் . புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும் . கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது . முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன் . இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது . பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன் . மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது . 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது . ஆட்களின் வரத்து கூடியதால் , நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது . வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன் . அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ ? அன்பரசு 23.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------------------------------------------------------------------- பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன . நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில் பத

சிறுமிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ராணுவ வீரனின் கதை! - சீதாராமம்- ஹனு ராகவப்புடி

படம்
  சீதாராமம் - தமிழ்  துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா, தருண் பாஸ்கர்  இயக்குநர் ஹனுமந்த் ராகவப்புடி இசை - விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு - பிஎஸ் வினோத் தேசப்பற்று ஊற்றியெழுதிய காதல் கதை.  இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறார்கள். தேசப்பற்று என்பதோடு மனிதநேயம் என்பது எல்லைகளைக் கடந்தது. அதை நாம் இரும்புவேலிகளால் அடைக்க முடியாது என்பதையும், பலரின் தியாகங்களால்தான் நமக்கு உயிர்வாழும் வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது.  இதை தொடர்புடையவர்களே மறந்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.  கதை 1964 - 1985 என்ற காலகட்டத்திற்குள் நடைபெறுகிறது. அஃப்ரின் என்ற பெண்ணுக்கு அவரது தாத்தாவின் சார்பாக ஒரு கடிதம் கிடைக்கிறது. அதை அவள் கொண்டுபோய் சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு தாத்தாவின் சொத்து கிடைக்கும். அதை அவள் தான் மன்னிப்பு கேட்காமல் இருக்க பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்காகவும் மன்னிப்புக் கேட்க கூடாது. தான் செய்வதெல்லாம் சரி என நினைப்பு கொண்டவள் அஃப்ரின்.  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்திய அதிகாரி ஒருவரின் கார

தன்னைக் காதலிப்பவனை மணக்க நினைப்பவளின் வாழ்க்கையில் வரும் காதலே தெரியாத நல்ல ஆன்மா! மதுமாசம்

படம்
  மதுமாசம் சுமந்த், ஸ்னேகா, பார்வதி மெல்டன் இயக்குநர் - சந்திர சித்தார்த்தா தலைப்பில் தான் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம்.  சஞ்சய், ஹம்சா என இருவர்  திருமணம் ஒன்றில் சந்திக்கிறார்கள். அங்கு வரதட்சணை சார்ந்து ஏற்படும் பிரச்னையை சஞ்சய் கல்யாண மாப்பிள்ளையிடம் பேசி தீர்க்கிறான். அதுவே ஹம்சாவுக்கு நல்ல அபிப்ராயத்தை தருகிறது. பிறகு நகருக்கு வந்தால், சஞ்சயின் வீட்டில் தான் ஹம்சா வாடகைக்கு தங்கும்படி சூழல் அமைகிறது.  சஞ்சய்யைப் பொறுத்தவரை சிகரெட் பிடிப்பது, மது அனைத்து அளவாட்டு உந்தி. ஆனால் ஹம்சாவுக்கு இதெல்லாம் ஆகாது. காலையில் எழுந்து கோலம்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் அவள் வழக்கம். அவளுக்கு சஞ்சய் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும்,  பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் பிடித்திருக்கிறது. அவளுக்கு மெல்ல சஞ்சய் மீது ஆர்வம் வருகிறது. கூடவே இருக்கும் தோழியும் உசுப்பேற்றுகிறாள்.  திருமணம் பற்றி சஞ்சயிடம் ஒருநாள் தைரியமாக சொல்லுகிறாள். சஞ்சய் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. அவனுக்கு சொத்துக்களோடு மாமா பெண் கிராமத்தில் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு ஹம்சா பற்றி பெரிய கருத்தேதும் இல்லை.  திருமண நிச்ச

சுயநல உலகில் நட்புக்கு என்ன அவசியம்?

படம்
மயிலாப்பூர் டைம்ஸ் - நட்புக்கு என்ன அவசியம்? நீங்கள் கிராமத்தில் வசித்தாலும் சரி, நகரத்தில் வசித்தாலும் சரி உங்களுக்கென நட்புகள் உருவாகும். இதில் நீங்கள் மோசமாக நடந்துகொள்கிறவர் என்றால் உங்களுக்கு கிடைக்கும் நட்பும் அதுபோல அமைவது விதி. சரியாக நடந்துகொண்டால், இயல்பாகவே அந்த ரேஞ்சில், ஜென்டில் மேனாக லினன் ஷர்ட் போட்டு பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கினால் கூட கற்பகாம்பாள் கபாலியில் வெங்காய பக்கோடா வாங்கி கொடு என கேட்டுத் தின்னும் நட்புகளும் அமையலாம். எனக்கு இந்த வகையில் அமைந்த நட்புகள் எல்லாமே குறிப்பிட்ட லட்சியப்போக்கு கொண்டவர்கள்தான். அதேசமயம் அமைதியைப் பார்த்து என்ன சொன்னாலும் கேட்பான், வம்பு தும்பு இல்லாத ஆத்மா என கடைவிரித்து நட்பு பாராட்டிய ஆட்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம். அனைத்திலும் தொட்டும் தொடாத பிராணியாகவே இருந்து வந்திருக்கிறேன். காரணம், நான் எந்த நட்பையும் தேடிப்போய் அமைத்துக்கொள்வதில்லை. தானாகவே அமைந்தால் சரி. இல்லையென்றால் ரயில் பயண நட்பு போல அமைந்தாலும் சரி, காலகட்டத்திற்குள் கட்டுப்பட்டதுதானே அப்படியே இறங்கிப் போய்விடுவேன். பத்திரிகை வேலையில் இருக்கும்போது