அடைய முடியாத லட்சியங்களால் மனமகிழ்ச்சி குறைகிறது! உளவியலாளர் ரீ குன் ஹூ
மொழிபெயர்ப்பு நேர்காணல் எழுத்தாளர் ரி குன் ஹூ 2024ஆம் ஆண்டு ரி குன் ஹூ எழுதிய இஃப் யூ லிவ் டு 100, யூ மைட் ஏஸ் வெல் பி ஹேப்பி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் பெங்குவின் பதிப்பகத்தில் கிடைக்கும். ரி குன் ஹூவுக்கு வயது 90. தன் வாழ்க்கையில் இரண்டாம் உலகப்போர், கொரிய போர், வறுமை, டைபாய்டு, வங்கி திவால் ஆவது, சிறைவாசம் என நிறைய அனுபவங்களை சந்தித்து கடந்து வந்தவர். ரி, தனது இருபதுகளில் முதல் தென் கொரிய அதிபரான சிங்மன் ரீக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பத்து மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். உளவியலாளராக தொழில் செய்யும் ரீ, நாடு முழுக்க பல்வேறு மருத்துவமனைகள், மனநல மையங்களில் வேலை செய்திருக்கிறார். உளவியல் ரீதியான செயல்பாடுகளை சீர்திருத்தி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார். ரீக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். இன்று அவருக்கு பேரப்பிள்ளைகளமும் உண்டு. நீங்கள் உங்களுடைய எழுபதாவது வயதில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். நூல்கள் வெளியாகி சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறீர்கள். வாழ்வில் பிந்தைய காலத்தில் எழுதுவது எப்படி இருக்கிறது? எழுதுவதில் என...