இடுகைகள்

புத்தக அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளம் வயதினருக்கான நூல்கள் 1993-2000

படம்
  தி கிவ்வர் லூயிஸ் லோவ்ரி பனிரெண்டு வயதான ஜோனாஸ் பிரச்னை, வெறுப்பு, வலி இல்லாத உலகத்தில் வாழ்ந்து வருகிற பாத்திரம். மெல்ல அவனுக்கு நினைவுகள் கிடைக்கும்போது அவனது வாழ்க்கை மாறுகிறது. வண்ணமும், காதலும் இல்லாத வாழ்க்கை பல கேள்விகளை எழுப்புகிறது. இதனை அவன் அறிந்துகொள்வதுதான் நாவலின் கதை. 1997 எல்லா என்சேன்டட் கெயில் கார்சன் லெவைன் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் எல்லா, எப்படி தன்னைத்தானே உணர்ந்துகொண்டு வாழ்கிறாள், தனக்கான அடையாளத்தை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை.  1998 ஹோல்ஸ்  லூயிஸ் சாச்சர் க்ரீன் லேக் எனும் பகுதியில் தவறு செய்த சிறுவர்களை அடைத்து வைத்துள்ளனர். ஸ்டேன்லி யெல்னட்ஸ் என்ற பதினான்கு வயது சிறுவன், தான் செய்யாத தவறுக்கு அங்கு தண்டனை பெற்று வருகிறான். அவனும் நண்பர்களும், அங்கிருந்து தப்பிக்க குழி ஒன்றை தோண்டுகின்றனர். அதன் வழியாக அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா இல்லையா என்பதுதான் கதை.  1999 ஆங்கஸ் தோங்க்ஸ் அண்ட் ஃபுல் ஃபிரான்டல் ஸ்னாக்கிங் லூயிஸ் ரென்னிசன் இளைஞர்களுக்கான கிளாசிக் நூல் இது. பதினான்கு வயது ஜார்ஜியாவின் காதல், பள்ளி வாழ்க்கையை பேசுகிற

வர்த்தக மையம் தாக்குதல் தொடர்பான நூல்கள்!

படம்
 தி லூமிங் டவர் ஐந்தாண்டு ஆராய்ச்சி, நூற்றுக்கும் மேலான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல். தாக்குதலை நடத்தியவர்களின் மனநிலையை சிறப்பாக பிரதிபலித்து புலிட்சர் விருது வென்றது. இதனை வர்த்தக மையம் சார்ந்த நூல்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  ஃபாலிங் மேன் அமெரிக்க வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு டான் டிலில்லோ என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை விவரிக்கிற நாவல் இது.  டைரக்டரேட் எஸ் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்த போர் பற்றிய நூல். அல்கொய்தா எப்படி உருவானது, அமெரிக்காவில் வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு ஆப்கானில் அல் கொய்தா வளர்ச்சி பெற்றதை நூல் விவரிக்கிறது புலிட்சர் விருது பெற்ற நூலை பத்திரிகையாளர் ஸ்டீவ் கோல் எழுதியிருக்கிறார்.  தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் ஒசாமா பின்லேடன் பத்திரிகையாளர் பீட்டர் பெர்ஜென் எழுதியுள்ள நூல் இது. அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாகவே பின்லேடனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. 

இந்தியா எப்படி இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்கிறது என்பதை அறிவதற்கான நூல்! புத்தக அறிமுகம்

படம்
            புத்தக அறிமுகம் இந்தியன் எகனாமிஸ் கிரேட்டஸ்ட் கிரிசிஸ் டி அருண்குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ப . 264 ரூ .499 பெருந்தொற்று இந்தியாவில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களை நூல் பேசுகிறது . வி வடிவ முன்னேற்றம் சாத்தியப்படவில்லை என்பது தற்போதைய நிலவரம் . இதனை அரசு எப்படி கையாண்டது , அதில் ஏற்பட்ட தடைகள் , சமாளித்த விதம் என ப்லவேறு விஷயங்களை நூலாசிரியர் பேசுகிறார் . அவர் இந்து ராஷ்டிரா ஆகார் படேல் வெஸ்ட்லேண்ட் ரூ . 799 இந்துத்துவா கருத்தியல் எப்படி இந்தியாவில் அடிப்படையான விஷயங்களை ஆக்கிரமித்து வருகிறது என்பதை பல்வேறு அடுக்குகளில் விவரிக்கிறார் நூலாசிரியர் ஆகார் படேல் . எப்படி பல்வேறு நம்பிக்கையான அரசு அமைப்புகள் வீழ்த்தப்படுகின்றன என்பதையும் செயல்பாட்டாளர் ஆகார் படேல் சிறப்பாக எழுதியுள்ளார் . டில் வீ வின் ரந்தீப் குலேரியா ககன்தீப் காங் , சந்திரகாந்த் லகாரியா பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ப . 352 ரூ . 299 இன்னும் எத்தனை நாட்கள் நாம் மாஸ்க் பயன்படுத்தவேண்டும் , கொரோனா இறப்புகள் குறைந்துவிட்டனவா என்பது

புத்தகம் புதுசு! - பழைய ஆடைகளை அணிந்தால் சூழலுக்கு நல்லதா?

படம்
இன்று டயட் என்ற வார்த்தையை நினைக்காத ஆட்கள் கிடையாது. வெள்ளையர்கள் இறுக்கிப் பின்னிய நரம்பு நாற்காலி போல இருக்க, இந்தியர்கள் பலருக்கும் வயிறு முன்னே தள்ளிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த டயட் சார்ந்து கோலா, சத்து பானங்கள், மாத்திரைகள், ஊட்டச்சத்து பானங்கள் என பெரும் சந்தை இயங்கி வருகிறது. இதன் மதிப்பு பல கோடிகள் வரும். டயட் கலாசார வரலாறு, அதன் தன்மை, பாதிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் பல்வேறு நோயாளிகளிடம் பேட்டி கண்டு எழுதி உள்ளார். எனவே டயட் சார்ந்த பல்வேறு போலி நம்பிக்கைகளை நீங்கள் இதன் மூலம் உணர்ந்து வெளியே வரமுடியும். அண்ணன்களைக் கொண்ட தம்பிகள் அனைவருக்கும் கிடைப்பது செகண்ட்ஹேண்ட் ஆடைகள்தான். இதுவே உலகம் முழுக்க பெரிய சந்தையாக உள்ளது.. பயன்படுத்திய ஆடைகளை வெளுத்து புதிய துணிகளைப் போல விற்கும் நிறுவனங்கள் இப்போது அதிகமாக உருவாகி வருகின்றன. அடிக்கடி புதிய துணிகள் வாங்கினால் உங்கள் பீரோ தாங்காது. காரணம், பழைய துணிகளை உங்களுக்கு போடவும் மனசு வராது. மயிலாப்பூரிலுள்ள அட்சய பாத்ரா மாதிரியான இடங்கள் உங்கள் பழைய துணிகளை பிறருக்கு கொடுக்க உதவின. உண்மையில் இத்துற

உலகம் அழியக் காரணங்கள் என்ன? - புத்தக அறிமுகம்

படம்
புத்தக விமர்சனம் இந்த உலகம் அழியப்போகிறது? முதல் வேலையாக என்ன செய்வீர்கள்? உங்களைக் காப்பாற்றிக்கொண்டு அடுத்த வேலையாக எப்படி வீடு, குடும்பம் , நட்பை காப்பாற்றுவீர்கள்? அதைத்தான் இந்நூலில் ஆசிரியர் வால்ஸ் சொல்கிறார். டைம் பத்திரிகையில் பணிபுரிந்துள்ளவரான வால்ஸ், நாம் இன்று புதிதாக உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு, ஆன்டி பயாட்டிக் முதற்கொண்டு விளக்கி, அவை நம்மை காக்குமாக என்று பேசுகிறார். உலகம் அழியும் என்றால் அதற்கான காரணம் எதுவாக இருக்கும்? உடனே நமக்கு கற்பனை விரியலாம். டெர்மினேட்டர் படம் ரோபோக்கள் சிந்திக்க தொடங்கினால் மனிதர்கள் அழிவதைப் பேசுகிறது. அதைப்போலவே அணு ஆயுதப்போர், சூழல் அழிவு, எரிமலை வெடிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் ஆசிரியர். பத்திரிகையாளர் என்பதால் அனைத்து விஷயங்களுக்கும் ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து பேசுகிறார். அறிவியல்பூர்வமாக உலகின் முடிவு என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டுமா? இந்த புத்தகத்தை பிடிஎஃப் தளத்தில் கள்ளத்தனமாக தரவிறக்கியேனும் படித்துவிடுங்கள். மனதில் ஏற்படும் மூர்க்கத்தனமான, பிடிவாதமான, குரூர எண்ணங்கள் ஆகிய

அங்கதமான அறிவியல் படிக்க ரெடியா?

படம்
வாட் இஃப் - ராண்டல் மன்றோ விலை ரூ.499 இப்படி நடந்தால் என்ன? என்று சிலமுறை யோசித்திருப்போம். அதனாலேயே வகுப்பில் பல மாணவர்களை கிண்டல் செய்து சிரித்திருப்பார்கள். சிரித்திருப்பீர்கள். அப்படி பல கேள்விகளை வலைத்தளத்தில் கேட்டு அதற்கு கார்ட்டூனிஸ்ட் ராண்டல் மன்றோ பதில் சொல்லியதை நூலாக்கி யிருக்கிறார். அதற்காக, நூலை வலைத்தளத்திலேயே படிக்கலாமா என்று கேள்வி கேட்க கூடாது. நான் பிடிஎஃப் வடிவில் படித்தேன். என் அருகில் இருந்தவர், பிடிஎஃப் வேலைக்காகாது என நூலை ஆர்டர் செய்து வாங்கி விட்டார். லட்சியம் படிப்பதுதானே, எந்த வடிவத்தில் இருந்தால் என்ன? கோக்குமாக்கான கேள்விகள். அதனால் பதில் வேண்டுமே என்றெல்லாம் கேள்விகள் கிடையாது. கிடைச்சா சந்தோஷம் இல்லைனா அதைவிட சந்தோஷம் என்பதுதான் இந்த கேள்விதார ர்களின் நோக்கம். கார்ட்டூனிஸ்ட் தன் ஓவியங்களின் உதவியுடன் அதனை கர்ம சிரத்தையாக நிறைவேற்றி இருக்கிறார். அணுஆயுதக் கப்பல் போல விண்வெளியில் செய்ய முடியுமா? எவ்வளவு நேரம் அழுதால் நம் உடலிலுள்ள நீர் முழுக்க வற்றும்? நம் டெக்னாலஜியைப் பயன்படுத்தி புதிய கோளை உருவாக்க முடியுமா? தற்போதைய மக்கள் தொ

புத்தகம் புதுசு! - மே 2019

படம்
புத்தகம் புதுசு! Tell Me Who You Are: Sharing Our Stories of Race, Culture, & Identity by   Winona Guo ,   Priya Vulchi அமெரிக்காவில் நிலவும் இனவேறுபாட்டை பல்வேறு களப்பணி சார்ந்து விளக்கி கூறுகிறார் வினோனா குவோ, பிரியா வல்சி. இன்றைய அமெரிக்கா குறித்து அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் இது.  You Are Never Alone by   Elin Kelsey ,   Soyeon Kim   (Illustrations) உலகில் நாம் மட்டும் வாழவில்லை. தாவரங்கள் முதல் நுண்ணுயிரிகள் வரை வாழ்வதைக் கூறுகிற நூல் இது. புவியீர்ப்பு முதல் காஸ்மோ கதிர்கள் வரை பேசி, நாம் எப்படி தாவரங்கள் தரும் பிராணவாயுவை சுவாசித்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதையும் இந்த நூல் நினைவுபடுத்துகிறது.  Eat to Beat Disease: The New Science of How Your Body Can Heal Itself by   William W. Li புத்தகம் முழுக்க 200 க்கும் மேற்பட்ட உணவுவகைகளைச் சொல்லிக்கொடுத்து நோய்களை விரட்டும் ஐடியாக்களை கூறுகிறார் ஆசிரியர் வில்லியம் டபிள்யூ லீ.  உணவுகளை எப்படி மருந்தாக்குவது என்று விளக்குகிறார் ஆசிரியரும் மரு

தாயிடம் பேசத் தயங்கிய விஷயங்கள் என்ன?

படம்
The Moment of Lift: How Empowering Women Changes the World by   Melinda Gates உலகின் மூன்றாவது செல்வாக்கான பெண்மணி மெலிண்டா கேட்ஸ். உலகம் முழுக்க கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதுபற்றி பயணத்தை இந்நூலில் விவரித்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.  Maybe You Should Talk to Someone: A Therapist, Her Therapist, and Our Lives Revealed by   Lori Gottlieb உளவியல் மருத்துவரின் உலகைப் பற்றிய நேர்மையான பதிவுகளைக் கொண்ட நூல் இது.  நாம் நம் தந்தையிடமும், தாயிடமும் பேசத் தயங்கும் கூச்சப்படும் விஷயங்களை பதினைந்து எழுத்தாளர்கள் மெய்ப்பட எழுதியுள்ளனர். இதனை தொகுத்துள்ள மிச்செல் ஃபில்கேட், தனது தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர். இதனை சமூக வலைத்தளங்களில் எழுதும்போது உலகெங்கிலுமிருந்து ஆதரவு குவிந்தது. சிலர் இம்முறையில் தனது அனுபவங்களை, கருத்துகளை எழுதினர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இதோ இந்நூலில் உள்ளன.  நன்றி: குட் ரீட்ஸ்

பில்கேட்சிற்கு பிடித்த நூல்களில் சில....

படம்
ஐ கன்டைன் மல்டியூட்ஸ் எட் யங் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் எப்படி நுண்ணூட்டச்சத்து பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று எட் யங் எழுதியுள்ளார். பிஹைண்ட் தி பியூட்டிஃபுல் ஃபாரெவர் காத்தரின் பூ கழிவறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று நம்புவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. எனர்ஜி மித்ஸ் அண்ட் ரியாலிட்டிஸ் வேக்லாவ் ஸ்மில் அணுசக்தி என்பது கார்பன் வெளியீட்டைத் தடுக்கும் என ஸ்மில் நம்புகிறார். நம்முடைய இன்றைய அணுசக்தி முயற்சி எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கும் என்று கூறியிருக்கிறார். தி மோஸ்ட் பவர்புல் ஐடியா இன் தி வேர்ல்டு வில்லியம் ரோசன் உலகை மாற்றிய கண்டுபிடிப்பு நீராவி எஞ்சின். அதன் வரலாற்றை ரோசன் விவரித்திருக்கிறார்.

பிப்ரவரி மாத நூல்கள் அறிமுகம் 2019

படம்
புத்தகங்களை வாசிப்போம் Twenty Yawns   By Jane Smiley and Lauren Castillo லூசி இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள். எப்படி அவள் தூங்கப்போகிறாள்? என்பதை புலிட்சர் பரிசு வாங்கிய ஜேன் ஸ்மைலி உங்களுக்கு சுவாரசியமாக எழுதிக்காட்ட, அதற்கு பக்கத்துணையாக படம் வரைவது ஓவியர் லாரன் காஸ்டில்லோ.  Archer   By Jacky Gray இயற்கையான வீரம் நெஞ்சில் நிறைந்த ஆர்ச்சருக்கு சவால்கள் நிறைய காத்திருந்தன. உண்மையில் அவன் எதிர்கொள்ள வேண்டியது என்ன? உண்மையான போர் எது? எதிரி யார் என்பதை வேடிக்கையான கதையில் ட்விஸ்டுகளோடு சொல்லி உள்ளனர்.  The Power of People Skills   By Trevor Throness குழுவாக உழைப்பவர்களை எப்படி மேலாண்மை செய்வது, மன அழுத்தமின்றி நேர்மையாக பணியாற்றி வெல்வது எப்படி என வெற்றிக்கதைகளை எப்போதும் போல உதாரணம் காட்டி எழுதியுள்ள நூல் இது.  A Grave Misunderstanding   By Len Boswell அவல நகைச்சுவைக் கதை. கொலை ஒன்று நடக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வருகிறார் சைமன். குற்றவாளி என சந்தேகப்படும் கூட்டத்திலிருந்து நிஜ குற்றவாளியை அடையாளம் கண்டாரா? கொலை நடந்தது எப்படி? ஏன் என்பதைச் சொல்லும் கதை இது.  Last Ho

புத்தக அறிமுகம்!

படம்
முத்தாரம் லைப்ரரி! The Future of Capitalism: Facing the New Anxieties   Paul Collier 256pp, harper மேற்கத்திய நாடுகளின் கருத்தியலான முதலாளித்துவம் சந்தித்துவரும் பிரச்னைகள், அதிலிருந்து மீள்வதற்கு அக்கருத்தியல் செய்யும் முயற்சி, ட்ரம்ப், பிரெக்ஸிட், வலதுசாரி அரசுகள் ஆகிய காரணங்களை ஆசிரியர் பால் கொலியர் விளக்குகிறார். Turned On: Science, Sex and Robots Kate Devlin   288pp, Bloomsbury sigma அறிவியல் வளர்ச்சியால் அதிகரிக்கும் செக்ஸ் ரோபாட்டுகள் எப்படி சமூகத்தை மாற்றும் எனவும், ரோபாட்டுகளுடனான உறவு குறித்தும் ஆசிரியர் விரிவாக விவரிப்பது அச்சுறுத்துகிறது.