உலகம் அழியக் காரணங்கள் என்ன? - புத்தக அறிமுகம்
புத்தக விமர்சனம்
இந்த உலகம் அழியப்போகிறது? முதல் வேலையாக என்ன செய்வீர்கள்? உங்களைக் காப்பாற்றிக்கொண்டு அடுத்த வேலையாக எப்படி வீடு, குடும்பம் , நட்பை காப்பாற்றுவீர்கள்?
அதைத்தான் இந்நூலில் ஆசிரியர் வால்ஸ் சொல்கிறார். டைம் பத்திரிகையில் பணிபுரிந்துள்ளவரான வால்ஸ், நாம் இன்று புதிதாக உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு, ஆன்டி பயாட்டிக் முதற்கொண்டு விளக்கி, அவை நம்மை காக்குமாக என்று பேசுகிறார். உலகம் அழியும் என்றால் அதற்கான காரணம் எதுவாக இருக்கும்? உடனே நமக்கு கற்பனை விரியலாம். டெர்மினேட்டர் படம் ரோபோக்கள் சிந்திக்க தொடங்கினால் மனிதர்கள் அழிவதைப் பேசுகிறது. அதைப்போலவே அணு ஆயுதப்போர், சூழல் அழிவு, எரிமலை வெடிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் ஆசிரியர்.
பத்திரிகையாளர் என்பதால் அனைத்து விஷயங்களுக்கும் ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து பேசுகிறார். அறிவியல்பூர்வமாக உலகின் முடிவு என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டுமா? இந்த புத்தகத்தை பிடிஎஃப் தளத்தில் கள்ளத்தனமாக தரவிறக்கியேனும் படித்துவிடுங்கள்.
மனதில் ஏற்படும் மூர்க்கத்தனமான, பிடிவாதமான, குரூர எண்ணங்கள் ஆகியவற்றை மனதின் பிரச்னை எனலாம். இதற்கும் நோயுற்ற மூளை என்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா? பத்தொன்பதாவது நூற்றாண்டில் சைபிளிஸ் எனும் ஒரு மனநலப் பிரச்னையில் இன்று உலகறிந்த வான்கா உள்ளிட்ட மேதைகள் சிக்கித் தவித்தனர். இதற்கு என்ன காரணம் என்பதை வெறும் ஸ்கேன் மூலம் அறிய முடியாது. அதற்குத்தான் ஆசிரியர் சில விளக்கங்களை கூறுகிறார். அவை என்ன என்று படித்துப்பாருங்கள். மகிழுங்கள்.
நன்றி குட் ரீட்ஸ்.காம்