டெக் புதுசு! - குதித்தால் குறையும் கலோரி!




Image result for smart rope




விளையாட்டுகளில் விளையாடினால் மட்டும் போதாது. காலத்திற்கேற்ப அப்டேட் ஆவது அவசியம். அதற்காகத்தான் உங்களுக்கு டெக் புதுசு பகுதியில் சில ஐட்டங்களை சுட்டு வந்திருக்கிறோம்.





பிளேஸ் பாட்ஸ்!

எக்சர்சைஸ் செய்யும்போது, குறிப்பிட்ட தடவை செய்தபின் அடுத்த பயிற்சிக்கு மாற வேண்டும். நேரத்தை நினைவுபடுத்தவேண்டும். இதற்காக உதவுவதுதான் பிளேஸ்பாட்ஸ். நீங்கள் செய்யும் பயிற்சிக்கு உதவியாளனாக இருக்கும். விலை 400 டாலர்கள்தான்.


ஸ்மார்ட் ரோப்

பள்ளிகளில் தோழிகளோடு ஸ்கிப்பிங் ஆடி மகிழ்ந்திருப்பீர்கள் அல்லவா? இப்போது அதே ஸ்கிப்பிங் கயிற்றில் சீரியல் பல்புகளை செட் செய்து ஸ்மார்ட் போனோடு இணைத்திருக்கிறார்கள். நீங்கள் ஸ்கிப்பிங் செய்வது போனிலுள்ள ஆப்பில் பதிவாகும். கூடுதலாக, எத்தனை கலோரி கரைந்தது என்ற தகவலும் இதில் உண்டு. விலை 80 டாலர்கள்.


ஸ்விம் கோச் கம்யூனிகேட்டர்

நீருக்குள் நீந்தும்போது கோச் என்ன கோதண்டராம சுவாமிகளே நம்மை தொடர்புகொள்ள முடியாது. காரணம், நீரின் அழுத்தம். இதற்காகத்தான் இந்த கருவி. ஸ்விம் கோச் கம்யூனிகேட்டரில் ஆப்பும் உள்ளது. இரண்டையும் ஒரு பட்டனில் இணைத்திருக்கிறார்கள். இதனால் எளிதாக கோச் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி ஜல்தியாக நீச்சலில் சாதிக்கலாம.

விலை 150 டாலர்கள்


ஹெட்காய்சே ஒன்

இப்படி சொன்னால் யாருக்கும் புரியாது. எளிமையாக ஹெல்மெட். தெருவில் மண்டை பத்திரமாக இருக்க வாகனங்களில் செல்லும்போது அணியலாம். ஐரோப்பிய யூனியல் அங்கீகரித்த விதிமுறைகளில் பாஸ் செய்திருக்கிறது. விலை 150 டாலர்கள்தான்.

நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

பிரபலமான இடுகைகள்