காதல்,பேராசை, பொறாமை - மூன்று உயிர்கள் பலி -பியோம்கேஷ் வெப்சீரிஸ்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ்
பியோம்கேஷ் சீசன் 3 ஷாஜாரூர் கந்தா
அனிர்பன் பட்டாச்சார்யா
சுப்ரதா த த்தா
ரிதிமா கோஷ்
பேனா நிப் ஒன்றால் பிச்சைக்கார ர், கடைக்காரர் என அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அடுத்ததாக யார் சாவார்கள் என மேற்கு வங்காளமே ஆவலோடு எதிர்பார்க்கும்போது தொழிலதிபர் தேவிஷ் பன்றி முள்ளால் தாக்கப்படுகிறார்.
ஆனால் அதில் ஒரு திருப்பம். தொழிலதிபர் தப்பித்து விடுகிறார். எப்படி? உண்மையில் இந்த பேனா நிப் கொலைகாரர் யார் என்பதை பியோம்கேஷ் கேள்வி கேட்டு, நாடகம் போட்டு டான்ஸ் ஆடி கண்டுபிடிக்கும்போது வருவது வேறு என்ன? எரிச்சலும் கொட்டாவியும்தான்.
பெரிய திருப்பங்கள் ஒன்றுமில்லை. காதல்தான் அனைத்து களேபரங்களுக்கும் காரணம். திறமை இருந்தால் காசு இருக்காது. காசிருப்பவர்கள், தம் மீது வயிற்றெரிச்சல் படுபவர்களுக்கு தரவேண்டும் என்பது என்ன தலைவிதியா?
தீபா என்ற முகர்ஜி குடும்ப பெண், பத்தாவது படித்து முடிக்கிறார். அப்போதே அவருக்கு கல்யாணம் என்கிறார் அவரின் தாத்தா. ஆனால் தனக்கு பிடித்த வேறு ஜாதி காதலனுடன்தான் கல்யாணம் என்று என்கிறார் தீபா. அந்தக் காதலர் யார் என அடித்தாலும் சொல்ல மறுக்கிறார். முகர்ஜி குடும்பத்தினர், கங்குலி, பானர்ஜி தவிர பிற ஜாதிகளில் திருமணம் செய்ய மறுக்கின்றனர். இப்படித்தான் தொழிலதிபர் தேவசிஸ், நல்ல பையன் என்ற சான்றிதழால் தீபாவிடம் மாட்டுகிறார்.
அவருக்கு தீபாவின் விஷயம் தெரியும் போது விரக்தியடைகிறார். விவகாரத்து கொடுத்துவிடுகிறேன் என்கிறார். ஆனால் தீபா, நான் இங்கேயே இருக்கிறேன். என்னை எங்கள் வீட்டுக்கு அனுப்பாதீர்கள் என்கிறார். காதலர் மனதில் இருந்தாலும் மெல்ல தேவசிஸ் மீதும் அவருக்கு கவனம் திரும்பும் வேலையில், கணவர் தேவசிஸ் பன்றி முள்ளால் குத்தப்படுகிறார். அதுவும் நுரையீரலில் முள் தைத்திருக்கிறது. யார் இந்த வெறிபிடித்த கொலைகாரர் என பக்சி கண்டுபிடிக்கிறார்.
நிர்பதி என்பவரின் வீட்டில் கூடுவது தேவசிஸ் மற்றும் நண்பர்களின் வழக்கம். இங்குள்ள ஒருவர்தான் அவரைக் கொலை செய்ய முயற்சித்திருப்பார்கள் என பியோம்கேஷ் நம்புகிறார். அதுவும் சரியாகவே இருக்கிறது. அவர் என்பதுதான் காட்சியாக விரிகிறது. பெண்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதை பியோம்கேஷ் சொல்லும்போது, சிரிப்பு எழ அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பதிலேயே ரொம்ப சுமாரான அத்தியாயம் இதுதான்.
கோமாளிமேடை டீம்