பரலோக நரகம் - அக்னியில் கொதிக்கும் ஆன்மா!






Digital Hell: Tech Tips for the Deceased - Creators





தெரிஞ்சுக்கோ!

நரகம்!


இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களிலும் நரகத்திற்கு முக்கியமான இடமுண்டு. புத்த மதத்தில் ஏழு பனி நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுபவர்களை அச்சுறுத்த நரகங்கள் புராணக் கதைகளில் உருவாக்கப்பட்டன. இன்று மோசமான ஆட்சியாளர் அதனை தன் வாழ்நாளில் மக்களுக்கு உருவாக்கிக் காட்ட முடிகிறது. இதையும் நாம் கர்ம பூர்வம் என்று சொல்லித் தப்பிக்க முடியும்.

கொடும் செயல்களை செய்பவர்களுக்கு நரகம் விதிக்கப்படுகிறது. மெசபடோனிய நம்பிக்கைப்படி, மோசமான செயல்களைச் செய்தவர்கள் கழிவுநீரைக் குடித்தபடி கற்களைத் தின்றபடி இங்கு வாழ வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.


ஆறாம் நூற்றாண்டில் தியோபிளஸ் அடானா என்பவர், வரலாற்றில் முதன்முறையாக தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்கிறார். இதற்குப் பரிசாக பிஷப் பதவியைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் குற்ற உணர்வு பெருக்கெடுக்க, கன்னி மேரியிடம் மன்னிப்புகேட்க, சாத்தானின் ஒப்பந்தத்தை மேரி முறிக்கிறார்.

ஜெரிலாக் என்பவர், ஸ்பெயினில் படிக்கிறார். இவரது எதிரிகள் இவர் சாத்தானின் அருள் பெற்றவர் என பிரசாரம் செய்கின்றனர். காரணம் இவர் போப்பாகும் வாய்ப்பு இருந்தது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் புத்த துறவி கோடெக்ஸ் ஜிகாஸ் எனும் 75 கிலோ பைபிளிலில் சாத்தானின் படத்தை ஒரேநாள் இரவில் வரைந்து சாதனை செய்தார். சாதாரணமாக இப்படி ஒரு படத்தை வரைவது சாத்தியமே இல்லை என்கிறார்கள்.


1668 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓவியர் கிறிஸ்டோபர் ஹைஸ்மன், தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்றதாக ஒப்பந்தங்களை தயாரித்து விற்றார். இதனை பின்னாளில் உளவியல் ஆய்வுக்கு சிக்மண்ட் பிராய்டு உள்ளிட்டோர் பயன்படுத்தினர்.

நன்றி - க்வார்ட்ஸ்









பிரபலமான இடுகைகள்