இடுகைகள்

கடவுள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் முருகன் என்பவன் யார்?

 தமிழ் முருகன் கவிஞர் அறிவுமதி தர்மலிங்கம் அறக்கட்டளை பதிப்பகம் இந்த நூலுக்கான விமர்சனத்தை வெளியிடும்போது அநேகமாக ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் முருகன் தொடரை சில வாரங்கள் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். பதிலுக்கு போட்டியாக இன்னொரு வார இதழின் ஆசிரியர் கருப்பண்ணசாமியின் வரலாற்றை எழுதியிருப்பார்.. போட்டி மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நல்ல விஷயத்தைக் கொண்டு வரக்கூடும். இதெல்லாம் ஒருவித நம்பிக்கை அவ்வளவுதான்.  அறிவுமதி, நூலில் ஓரிடத்தில் தமிழ் முருகன் தொடரில் கூறும் விஷயத்தை தனிப்பட்ட சாதி, மதம் சார்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அப்படி பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.  நூலைப் பார்ப்போம். நூலில், முருகன் என்பது முருகன் என்பது மட்டுமே, அவன் போர்வீரன், அரசாண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. இதற்கான இடைச்செருகலையும் விளக்குகிறது. சிவன், பார்வதியின் பிள்ளை கந்தன் என்ற புனைகதைகளை நூல் ஏற்கவில்லை. முருகன் வேறு, கந்தன் வேறு என்று நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். தமிழ் இனத்தின் அடையாளமாக ஒற்றை கடவுளாக முருகனை கூறுவதோடு, அர்த்தமற்ற நெல் தூவுதல் தமிழர் ...

எளிய குடும்பத்தில் பிறந்து நாடுகளுக்கு இடையிலான போரில் கடவுள் தேசத்தால் பயிற்றுவிக்கப்படும் வீரனின் கதை!

படம்
    பிகினிங் ஆப்டர் தி எண்ட் மாங்கா காமிக்ஸ் 200 அத்தியாயங்கள். குன்மாங்கா.காம் இந்த காமிக்ஸில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று கிங் கிரேவின் கதை. அடுத்து அவரின் மறுபிறப்பு கதை. தொடக்கத்தில் நாம் வாசிப்பது கிங் கிரேவின் மறுபிறப்பு கதை. கிங் கிரே எப்படியோ திடீரென இறந்துபோகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் கூறப்படுவதில்லை. ஆனால், பதிலாக அவர் குழந்தையாக கூலிவேலைகளை செய்யும் ஒரு தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். அவன் இவன் என்று கூறிக்கொள்வோம். ஆர்தர் லெய்வென்னின் கதை இது. அக்கதையின் போக்கினூடே திடீரென கிங் கிரேவின் முன்கதையும் கூறப்படுகிறது. இடையில் ஜாஸ்மின் பிளேம்ஸ்வொர்த்தின் கதையும் கூட. எனவே, இருநூறாவது அத்தியாயத்தை தொடும்போது எதற்கு இத்தனை பாத்திரங்களின் முன்கதை கூறவேண்டும் என்று கூட தோன்றுகிறது. இந்த இடத்தில் கதாசிரியர் சற்று குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆர்தர் லெய்வென் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன். அவன் தன்னுடைய உழைப்பால் மெல்ல முன்னேறி வளர்கிறான். ஒருகட்டத்தில் எல்ப் இளவரசியைக் காப்பாற்றி அவர்களுடை அரசரின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். அவர்களின் மருமகன் ஆகும் நிலை. அவனை ஏ...

ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

படம்
      ரோனி சிந்தனைகள் நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது. ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும். பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது. சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது. மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி ...

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வது...

உண்மையைத் தேடுவதே இளைஞர்களின் முதல்பணி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி மனிதர்கள் செய்யும் பணியில் இறுதியில் எஞ்சுவது அழிவும், அழிவும், விரக்தியும்தான். இதற்கு எதிரே சொகுசான பொருட்களும், கொடூர வறுமையும் நோயும், பட்டினியும் உள்ளன.   இதனோடு குளிர்பதனப்பெட்டியும், ஜெட் விமானங்களும்   இருக்கின்றன. இவை எல்லாமே மனிதர்கள் உருவாக்கியவைதான். நம்மால் உருவாக்க முடிந்தது இதைத்தானா, உண்மையில் மனிதர்களால்   செய்ய முடிந்த எந்திரங்கள் எவை?   துணி துவைக்கும் எந்திரங்கள், பாலங்கள், விடுதிகள் என மனிதர்கள் உருவாக்கிய பலவும் வேறுவேறு பொருட்களைக் கொண்டவை. மனிதர்கள் உண்மையாக உருவாக்கியது எதுவென தெரியாதவர்களுக்கு, அதில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்யமுடியாது. மனிதர்களின் உண்மையான பணி, உருவாக்கம் என்பது என்ன? உண்மையைத் தேடுவதும், கடவுளைக் கண்டடைவதும்தான் என்று கூறலாம். இந்த மூடிய செயல்பாடுகளில் அன்பு தட்டுப்படுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்ளும் அன்பே புதிய உலகை உருவாக்குகிறது. திங் ஆன் திஸ் திங்க்ஸ் எது உண்மை, கடவுள் யார் என்பதைத் தேடுவது உண்மையான தேடல். பிற விஷயங்கள்...

காதலைப் புரிந்துகொள்வது எப்படி? - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தென் தேர் இஸ் லவ் இலவச நூலில் இருந்து… ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒரு உறவில் பாதுகாப்பைத் தேவையாக நினைக்குப்போது அது பயத்தையும் சோகத்தையும் உருவாக்குகிறது. பாதுகாப்பைத் தேடும்போது அது, பாதுகாப்பின்மையை அழைத்து வருகிறது. உங்கள் உறவுகள் எதிலாவது பாதுகாப்பைத் தேடியுள்ளீர்களா? நம்மில் பெரும்பாலானோர்   காதலிக்க, காதலிக்கப்பட என்ற வகையில் ஒருவகை பாதுகாப்பை விரும்புகிறவர்கள். உண்மையில் ஒருவருக்கொருவர் காதலிக்கிற சூழ்நிலையில் அந்த காதல் இருவருக்குமான பாதுகாப்பைக் கொண்டிருக்கிறதா? இந்த பாதுகாப்பு என்பது, குறிப்பிட்ட வழிமுறையைக் கொண்டுள்ளதா? நாம் காதலிக்கப்படுவதில்லை. காரணம், நமக்கு எப்படி காதலிப்பது என்று தெரியாது. காதல் என்பது என்ன? இதைப்போல உலகம் முழுவதும் களங்கப்படுத்தப்பட்ட தவறாக பொருள் கொள்ளப்பட்ட வார்த்தை வேறு ஏதும் இருக்க முடியாது. நீடித்த காதல், அழியாத காதல் என்பதை மாத இதழ், நாளிதழ், மிஷனரிகள் வரையில் பேசியுள்ளனர். ‘’நான் எனது நாட்டை, அரசரை, நூலை, மலையை, மனைவியை, மகிழ்ச்சியை, கடவுளைக் காதலிக்கிறேன்.’’ இப்படி பலமுறை பலரும் சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் காதல் என்பத...

தனது காணாமல் போன மாமாவைக் கண்டுபிடிக்க உயிரைப் பணயம் வைக்கும் புலனாய்வாளர் ரீயூனியன் - சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்

படம்
  ரீயூனியன் – தி சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ் சீன டிவி தொடர் 2020 -july to  august 32 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் இயக்குநர் பான் அன் ஸி வூ குடும்பம் கலைப்பொருட்களை சீன தொல்பொருள் துறையுடன் அகழ்ந்து எடுத்து அதை வியாபாரம் செய்து வருகிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் வூசி இவன் தொல்பொருட்களை கண்டறிந்து புலனாய்வு செய்து மர்மத்தை கண்டறிபவன். இவன் எதிரிகளே இவனை சொல்லுவது போல கடவுளை நம்பாத நாத்திகன். கண்ணால் பார்ப்பது, அதிலிருந்து கற்றுக்கொள்வதை மட்டுமே நம்புவன். இவனது நண்பர்கள் குண்டு வாங், அதிரடி கைலன். இதில் வாங், பேசிக்கொண்டே இருப்பான். வூசி பேசுவது காரண காரியமாகத்தான். கைலன் பெரும்பாலும் பேசாத ஆள். தொடரில் அவனுக்கு வசனம் குறைவு. ஆனால் தன் இரு நண்பர்களுக்கு ஆபத்து வரும்போது யோசிக்கவே மாட்டான். எதிரிகளை மண்டை உடைத்து மாவிலக்கு ஏற்றிவிடும் தீரன். வூசியின் தாய்மாமாக்கள் மூவர். இதில் இரண்டாவது மாமா சொல்படி தான் வூசி கேட்டு நடக்கிறான். இவர்களுடையது பணக்கார குடும்பம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் வூசியை இரண்டாவது, மூன்றாவது மாமா ஆகிய இருவரும்தான் பார்த்துக்கொள்கிறார்கள்...

கடவுள் ஆணா, பெண்ணா, ஏன் வறுமை, மகிழ்ச்சி எங்கே, சமூகத்தின் விதிமுறை - ஜே கிருஷ்ணமூர்த்தி பதில்கள்

படம்
  ஜே கே ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   பயமில்லாத நிலை என்ற பழக்கத்தை நாம் எப்படி பெறுவது ? நீங்கள் பயமில்லாத நிலை என்பதை பழக்கம் என்று கூறுகிறீர்கள். அதை சரியாக கவனியுங்கள். பழக்கம் என்பது தினசரி திரும்ப திரும்ப செய்வதன் மூலம் உருவாகிறது. பயமில்லாத நிலை என்பது பழக்கங்களில் ஒன்றா? இல்லை. வாழ்க்கை, மரணம் என இரண்டையும் நேரடியாக சந்திக்கும்போதுதான் பயமற்ற நிலை உருவாகும். அவற்றை நீங்கள் நேரடியாக பார்த்து அவற்றை ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை பற்றிய பயங்களிலிருந்து சுதந்திரம் பெற்று பயமற்ற நிலையை அடைய முடியும். நீங்கள் செய்யும் விஷயங்களை பழக்கவழக்கங்கள் என புரிந்துகொண்டீர்கள் என்றால் அது தவறான புரிதல். பழக்கங்களை அடிப்படையாக கொண்டுதான் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் செயல்களை செய்யும் எந்திரமாக வாழ்கிறீர்கள் என்று பொருள். பழக்கவழக்கங்களை தினசரி செய்வது வருவது என்பது உங்களை நீங்களே பாதுகாக்க சுவரைச் சுற்றி கட்டிக்கொள்வது போலத்தான். அதனால் நாம் மனதளவில் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், உ...

தீவு மக்கள் மீது திடீரென கோபம் கொண்டு வேட்டையாடும் தொன்மை கடவுள்! - அலோகா ஸ்கூபி டூ

படம்
                அலோகா ஸ்கூபி டூ ஹவாயிலுள்ள அழகான தீவுதான் அலோகா . அங்கு அரசுக்கு முக்கியமான வருமானம் சுற்றுலா பயணிகளும் , கடலில் மீன் பிடித்து விற்பதும்தான் . இப்படி இருக்கையில் திடீரென அ்ங்குள்ள தொன்மையான கடவுளின் ஆன்மா அம்மக்களை தாக்க தொடங்குகிறது . விரைவில் அங்கு கடலில் அலைச்சறுக்கு போட்டி நடக்கவுள்ளது . இதனால் அந்த நகரின் மேயர் பதறுகிறார் . அங்கு நிலங்களை விற்று கட்டிடங்களை கட்டி எழுப்ப நினைத்தவர்களும் தொழிலை இழக்கின்றனர் . உண்மையில் திடீரென நடக்கும் அந்த தாக்குதலின் பின்னணி என்ன ? சிறு மனிதர்களை அனுப்பி சுற்றுலா பயணிகளை அடித்து உதைத்து விரட்டும் நோக்கம் என்ன ? வெளியாட்களை மெல்ல உள்ளூர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு சூழல் மாறுகிறது . இந்த சூழ்நிலையை எப்படி மிஸ்ட்ரி மெஷின் குழு கண்டுபிடிக்கிறது என்பதுதான் கதை .    ஹவாய் மக்களின் கலாசாரம் , அவர்களின் நம்பிக்கை , உணவு என நிறைய விஷயங்களை அனிமேஷன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் . மக்களிடையே உள்ள நம்பிக்கையை வைத்து எப்படி சிலர் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாத...

அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!

படம்
  cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ்   ஜானியின் அசுரவேட்டை காமிக் பிடிஎப் டைம்ஸ் தமிழில் ஜானி வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை. 18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள்  நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை. காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது. புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள்...

இந்தியர்கள் பெருமைப்படுவதற்கான ஓர் நூல்!- இந்துத்துவா நேசர்களுக்கான நூல்

படம்
நம்பக்கூடாத கடவுள் - ஹிந்துத்துவா சிந்தனைகள் அரவிந்த் நீலகண்டன் கிழக்கு பதிப்பகம் வரலாற்றில் மொகலாயர்கள் படையெடுப்பு இந்துக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? அசோகர் மரம் நட்டார், பிற மதங்களை போஷித்தார் என்பவர்கள் இந்து மன்னர்களைப் பற்றி(வீர சிவாஜி) ஏன் எதுவும் பேசமாட்டேன்கிறார்கள், இந்தியா எனும் பன்மைச் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொக்கிஷங்களை அழித்தவர்கள், திருடியவர்கள் யார், மொகலாயர்களின் வரி, பிற மத மன்னர்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் இன்றும் இந்தியர்களின் மனதில் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலில் பதில் எழுதியுள்ளார். இந்நூலில் 60 பக்கங்கள் வரை மேற்சொன்ன விஷயங்கள் பேசப்படுகிறது. பின்னர் அப்படியே தடம் மாறி மேற்கத்திய அரசுகள் இந்திய கலாசாரப் பொக்கிஷங்களை மூலிகைகளை எப்படி திருடுகிறார்கள், அதைத் தடுக்கும் அவசியம் என தடம் மாறுகிறது. இந்த இடம் நூலில் பொருந்தாமல் இருக்கிறது. முழுக்க இந்துத்துவ கருத்துகள் என்று படிப்பவர்களுக்கும், இந்த இடம் பார்த்திபன் படம் போல புரியாமல் போக அதிக வாய்ப்பு உண்டு.  அயோத்தி ராமர் கோவில் த...