இடுகைகள்

கல்வி அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரைகுறை படிப்பாளிகளின் ஆபத்து - சேட்டன் பகத்

படம்
பொதுவாக கல்வி தொடர்பான பேச்சுகளைப் பற்றி ஊடகங்களோ, நம் அரசியல்வாதிகளோ பேசுவது இல்லை. காரணம், அதனை உருவாக்கியதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதாலா என்று தெரியவில்லை. அண்மையில் வெளியான ஆசர் அறிக்கை(ASER 2014) கல்வியில் உலகளவில் எப்படி பின்தங்கியிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் மதிய உணவுத்திட்டம், சேர்க்கை எல்லாம் முந்தைய ஆண்டுகளை விட முன்னேறி இருக்கிறதுதான். ஆனால் கல்வியின் தரம் கூடியிருக்கிறதா? இல்லை என உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு வகுத்தல் கணக்கு போடமுடியவில்லை. இதனை தனியார் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் செய்கிறார். ஆனால் அரசுப்பள்ளி மாணவர் தடுமாறுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவரால் எளிமையான வாக்கியத்தை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்றால் நாம் பள்ளிச்சேர்க்கை பற்றி உச்சிமுகர்ந்து கொண்டாடி என்ன பயன்? காரணம் ஆசிரியர்களின் திறன் இன்மை. பள்ளிப்பாடமோ கடந்த காலத்தில் நிற்கிறது. இப்படி படித்து அரசு பெருமை கொண்டாடி வெளிவரும் மாணவர்களால் என்ன பிரயோஜனம்? வேலையில்லாமல் நாளை தெருவில் நின்