இடுகைகள்

ஃபின்லாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறையில் கிடைக்கும் கைதிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் தொழில் நிறுவனங்கள்!

படம்
              உலகமெங்கும் உள்ள ஏஐ நிறுவனங்கள், தங்கள் எல்எல்எம் மென்பொருளுக்கு பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்ய, தகவல்களை அளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இதை செய்வதற்கு ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிகவும் குறைவு. பொதுவாக பெரிய நிறுவனங்களை வைத்து தகவல் பயிற்சிகளை செய்தால் அதற்கு ஏராளமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதே பணிக்கு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினால் எப்படி? சிறைக் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு என அரசுக்கு உதவியது போலவும், சம்பளத்தை குறைவாக கொடுத்து எளிதாக வேலையை முடிக்கலாமே? இப்படித்தான் ஃபின்லாந்து கம்பெனி மெட்ராக் நினைத்தது. தனது யோசனையை சிறைத்துறை மறுவாழ்வு திட்ட தலைவரிடம் கூறியது. அவருக்கு பெரிய சந்தோஷம். கைதிகளுக்கு ஏஐ தொடர்பாக வேலை என நினைத்து மகிழ்ந்திருக்கிறார். மெட்ராக்கின் லட்சியம், குறைந்த கூலி. அதேசமயம் ஃபின்னிஷ் மொழியில் எந்திரவழி கற்றலை அமைப்பது. இதற்காகவே கைதிகளைப் பயன்படுத்துகிறது குறைவான கூலியை வழங்குகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.54 யூரோக்களை கூலியாக கைதிகளுக்கு வழங்குகிறது. இப்படி இருபது கைதிகளை தனது வேலைக்கு பயன்படுத்துகிறது. ஃபின்லாந்து நாட்டில