சிறையில் கிடைக்கும் கைதிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் தொழில் நிறுவனங்கள்!

 

 

 

 

 


 

 

உலகமெங்கும் உள்ள ஏஐ நிறுவனங்கள், தங்கள் எல்எல்எம் மென்பொருளுக்கு பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்ய, தகவல்களை அளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இதை செய்வதற்கு ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிகவும் குறைவு. பொதுவாக பெரிய நிறுவனங்களை வைத்து தகவல் பயிற்சிகளை செய்தால் அதற்கு ஏராளமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதே பணிக்கு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினால் எப்படி? சிறைக் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு என அரசுக்கு உதவியது போலவும், சம்பளத்தை குறைவாக கொடுத்து எளிதாக வேலையை முடிக்கலாமே?

இப்படித்தான் ஃபின்லாந்து கம்பெனி மெட்ராக் நினைத்தது. தனது யோசனையை சிறைத்துறை மறுவாழ்வு திட்ட தலைவரிடம் கூறியது. அவருக்கு பெரிய சந்தோஷம். கைதிகளுக்கு ஏஐ தொடர்பாக வேலை என நினைத்து மகிழ்ந்திருக்கிறார். மெட்ராக்கின் லட்சியம், குறைந்த கூலி. அதேசமயம் ஃபின்னிஷ் மொழியில் எந்திரவழி கற்றலை அமைப்பது. இதற்காகவே கைதிகளைப் பயன்படுத்துகிறது குறைவான கூலியை வழங்குகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.54 யூரோக்களை கூலியாக கைதிகளுக்கு வழங்குகிறது. இப்படி இருபது கைதிகளை தனது வேலைக்கு பயன்படுத்துகிறது.

ஃபின்லாந்து நாட்டிலுள்ள பெரும்பாலான சிறைகள் திறந்தவெளியில் அமைந்தவை. ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி ஏதாவது வேலையை செய்துகொண்டு இருக்கலாம். அருகிலுள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்வது, கல்வி கற்பது என எதையும் செய்யலாம். அதிக பாதுகாப்பு கொண்ட ஹமீன் லின்னா சிறை அப்படியானது அல்ல. அங்குள்ள சிறைக்கைதிகளுக்குத்தான் ஏஐ வேலை தரப்பட்டுள்ளது. துணிகளை துவைப்பது, கிழிந்த துணிகளை தைப்பது, தரையை துடைப்பது ஆகிய வேலைகளை கைதிகள் செய்து வந்தனர். அவர்களுக்கு ஆறு மணிநேர வேலைக்கு ஆறு யூரோ சம்பளமாக தரப்பட்டது. இதனால் இந்த வேலையில் இருந்து பலரும் ஏஐ வேலைக்கு மாறினர்.

நார்டிக் நாடுகளில் மெட்ராக் நிறுவனம், கைதிகளை பயன்படுத்தி தனது ஏஐயை பயிற்சிக்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளது. இதற்கு இரண்டு மில்லியன்களை செலவழிப்பதாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா, கென்யா, இந்தியா ஆகிய நாடுகளில் வேலையை அவுட்சோர்ஸ் செய்து ஓப்பன் ஏஐ இயங்கி வருகிறது. அந்த வகையில் மெட்ராக், ஃபின்னிஷ் மொழிக்காக கைதிகளை குறைந்த சம்பளத்தில் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
வயர்ட் இதழ்
மோர்கன் மீக்கர் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்