புரொஜெக்ட் சீட்டா வெற்றி பெறுமா?
சீட்டா அறிமுகம்
வெற்றி பெற்றதா?
கடந்த செப்டம்பர்
மாதம், எட்டு ரேடியோகாலர் பொருத்தப்பட்ட சீட்டாக்கள் நமீபியாவிலிருந்து இந்தியாவின்
குனோ தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் மைல் தூர பயணம். புரொஜெக்ட்
சீட்டா என்ற பதிமூன்று ஆண்டு கால திட்டத்தின்படி சீட்டாக்களை இந்தியாவிற்கு கொண்டு
வந்தனர். கடந்த எழுபுது ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த புல்வெளிப்பகுதி சீட்டாக்கள்
வேட்டையர்களால் வேட்டையாடப்பட்டன. எனவே, சீட்டாக்கள் எளிதாக அழிந்துவிட்டன.
செப்டம்பர்
மாதம் 18ஆம் தேதி, புரொஜெக்ட் சீட்டா திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கியது. மொத்தமுள்ள இருபது சீட்டாக்களில்
எட்டு சீட்டாக்கள், மூன்று குட்டிகள் இறந்துவிட்டன. இப்போது மீதமுள்ள சீட்டாக்களை பாதுகாக்க
தேசியப்பூங்கா அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.
உண்மையில்
சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை பாதுகாக்க முடியாது போனது இந்தியாவுக்கு தர்மசங்கடமான
நிலைமைதான். அவற்றை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்று பணியாளர்களுக்கு தெரியவில்லை
என்று கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன. இறப்பிற்கான முக்கியக் காரணம், ரேடியோ காலர்
பொருத்தப்பட்டதுதான் என கூறப்படுகிறது. அதன் வழியாக நோய்த்தொற்று பரவி சீட்டாக்களை
பலிவாங்கியுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்ட சீட்டாக்களுக்கு காயம் ஏற்பட்டதா, ஆரோக்கியம் எப்படியுள்ளது என்பதைப்
பற்றிய கலந்துரையாடல்களை இந்திய அதிகாரிகள் புறக்கணித்தனர் என வெளிநாட்டு சூழலியலாளர்கள்
கூறுகின்றனர்.
குனோ தேசியப்பூங்கா,
பார்வையாளர்களுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. பூங்காவில் ஆஷா என்ற பெண் சீட்டா உள்ளது.
புதிய சூழலை ஏற்றுக்கொண்டு வாழும் அதுவே சூழலியலாளர்களுக்கு புதிய நம்பிக்கையாக உள்ளது.
ஆஸ்தா ராஜ்வன்சி
டைம் வார
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக