இடுகைகள்

நீர்யானை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? உண்மை. பட்டாசுகளில் உலோகத்துடன் கலந்த வேதிப்பொருட்கள் (Aluminium, Iron,Sodium Salicylate, potassium perchlorate) ஏராளமாக உள்ளன. வெடிக்காத பட்டாசுகளை நீரில் நனைத்து பிறகே அப்புறப்படுத்தவேண்டும். பட்டாசுகளில் உள்ள உலோகங்கள், வேதிப்பொருட்கள் தனியாக இருந்தால் அதனை மறுசுழற்சி செய்யலாம். இப்பொருட்கள், பட்டாசில் வெடிமருந்தாக ஒன்றாக கலந்துவிட்டால், அதனை மறுசுழற்சி செய்வது கடினம்.   நீர்யானைய விட மனிதரால் வேகமாக ஓட முடியுமா?  உண்மை. யானைக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பெரிய விலங்கு, நீர்யானை. இதன் எடை 1,800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், நீர்யானை காட்டில் மணிக்கு 48 கி.மீ. வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது மனிதனால் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில்தான்  ஓட முடிகிறது.  https://www.fswaste.co.uk/can-you-recycle-fireworks/ https://www.smithsonianmag.com/arts-culture/14-fun-facts-about-fireworks-180951957/ https://www.britannica.com/story/how-fast-is-the-worlds-fastest-human#:~:text=Since%20many%20people%20are%20more,%3A%2037.58%20or%2023.35%2C

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்