உலகின் முதல் வெற்றிகரமான குளோனிங் விலங்கு எது?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பி53 என்ற மரபணுவின் பயன் என்ன? இந்த மரபணு, டிஎன்ஏ சேதமாகும்போது செல்கள் புதிதாக உருவாவதை தடுத்து புற்றுநோய் அபாயத்தை முற்றாக தடுக்கிறது. அதேசமயம் இந்த பி53 மரபணு ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகும்போது, புற்றுநோய் ஆபத்து ஏற்படும். இந்த மரபணு பற்றி அறிந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க இதை பயன்படுத்திகொள்ள முடியுமா என யோசித்து வருகிறார்கள். பி53 மரபணு, 1979ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மரபணுவியலின் தந்தை என கிரிகோர் மென்டல் கருதப்பட காரணம் என்ன? அவர் பதினொரு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தாவரங்களை ஆராய்ந்து அதன் இனப்பெருக்கம் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைத்தார். மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் துறவி. தனது தோட்டத்தில் உள்ள பட்டாணியை ஆராய்ந்து மரபணு பற்றிய உண்மைகளை உலகிற்கு சொன்னார். வில்லியம் பேட்சன் என்ற ஆராய்ச்சியாளர், மெண்டலின் ஆய்வை அறிவியல் உலகிற்கு கொண்டு வந்தார். மரபணுவியல் என்ற பதத்தையும் வில்லியம் அறிமுகப்படுத்தி வைத்தார். டார்வின், மெண்டல் என இரு புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் அறிவார...