இடுகைகள்

புத்தகம் புதிது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தக விமர்சனம் - கோமாளிமேடை டீம்

படம்
புத்தக விமர்சனம் கி.மு கி.பி  மதன் கிழக்கு பதிப்பகம் விலை ரூ.170 கி.மு கி.பி- ஆசிரியர் மதன் கி.மு. கி.பி நூல் உலகம் தோன்றியதிலிருந்து நாகரிகம், கலாசாரம், முக்கியமான மனிதர்கள் என பலரையும் எளிய மொழியில் அறிமுகம் செய்கிறது. சிறுவயதில் சமூக அறிவியல் புத்தகத்தில் படிப்பது போன்ற கடுநடையில் எழுதாமல் சிம்பிளாக ஜாலி மொழியில் அறிமுகம் செய்யும் வரலாற்று நூல் என்பது இதனை யாரும் எடுத்து வாசிக்கலாம் என்ற தெம்பை தருகிறது.  இதில் நேர்த்தியான புகைப்படங்களோடு செய்தியை நறுக்கென் சொல்லிச்செல்வது சுவாரசியமாக இருப்பதோடு, அத்தியாயங்களும் கடலென நீளாமல் வாசகனின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. பரபரவென புல்லட் ரயில் வேகத்தில் அத்தியாயங்கள் கேலியும் கிண்டலும் நடுவில் சுவாரசியங்களும் திடுக் திருப்பங்களும் கார்டூனிஸ்ட் - எழுத்தாளர் மதனின் தனிச்சிறப்பு.  அக்நெடான், டூட்டாங் ஆமன் எனும் மன்னர்கள் பற்றிய பகுதி அதி சுவாரசியம். டூட்டாங் கொல்லப்படும் பகுதியை மதன் விவரித்திருப்பது , ஹாஸ்பிடலில் 70 நாட்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு பின் இறப்பு அறிவிக்கப்பட்ட அமரர் ஜெ. ஜெயலலிதாவின் இறப்பை நினைவுபடுத்துவது  தற்

புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் - புதிய ஜனநாயக வெளியீடு.

படம்
புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் - புதிய ஜனநாயக வெளியீடு.  இந்தியாவின் காங்கிரஸ்,பா.ஜ.க என ஒவ்வொரு கட்சியின் ஆட்சிகாலத்திலும் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு எப்படி சுருக்கப்படுகிறது, அவர்களின் சந்தை சுருங்கப்படுவது, வருமான வாய்ப்புகளை அங்குலம் அங்குலமாய் அபகரிக்கப்படுவது எப்படி என கூறும் நூல் இது. எந்த வித அலங்கார வார்த்தைகளும் இல்லாத நேரடியான உண்மையை சுடச்சுட பேசுகின்ற நூல், இன்று வரை மாறிவரும் அரசுகள் விவசாயிகளை கிள்ளுக்கீரையாக நடத்தும் முறைக்கு உலகச்சந்தை எப்படி காரணமாகிறது என்பதை  துல்லியமான யாரும் மறுக்கமுடியாத தரவுகளோடு பேசுவது இந்நூலின் மாபெரும் பலம்.  விவசாய சந்தையை பெருநிறுவனங்களின் கைகளுக்கு மாற்ற அரசு திட்டமிட்டு பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களில் ஷரத்துகளை நுழைத்து அதில் மாநில அரசையும் உதவ முடியாதபடி துண்டித்து தனிமைப்படுத்தி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் அரசின் முற்கால சாதனைகளை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. நூலில் பயிர்களுக்கான கடன்கள், பயிர்க்காப்பீடு மோசடி, அரசின் மானியங்கள், முத்ரா உள்ளிட்ட வங்கி கடன்கள் என அனைத்தும் எப்படி விவசாயிகளுக்க

மின்னூல் புத்தகம் புதிது,

படம்

நூல் வெளி

பாரதிபுரம் ஆசிரியர்: யு. ஆர். அனந்தமூர்த்தி பதிப்பகம்: அம்ருதா, சென்னை.                                            ஜெர்ரி – ப்ளம்      பிராமணக்குடும்பத்தில் பிறந்த ஜகன்னாத ராயன் லண்டனில் மேற்படிப்பு படித்துவிட்டு, பாரதிபுரம் எனும் அவனது சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு மனிதர்களை அடிமைபோல கசக்கிப்பிழியும் சாதி மனோபாவம் எங்கும் துளிர்விட்டிருக்க, அதைக்களைய பல்வேறு வழிகளில் அவன் முயற்சிக்கிறான். என்னவானது அவன் முயற்சிகள்? போராட்டத்தில் வென்றானா என்று கூறுகிறது நாவலின் உச்சப்பகுதிகள்.      நாவல் பயணிப்பது ஊருக்கே முதல்வனான மஞ்சுநாத சாமியைக் காப்பாற்றும், போற்றும் குடும்பத்து மனிதனின் பார்வை வழியில் என்பதைத்தெரிந்துகொள்ளவேண்டும். முழுக்க ஐரோப்பிய வழியில் படித்தவர்களின் அறிவுசார்ந்த தளத்திலான தேடல்கள், தவிப்புகள், சிந்தனைகள், உரையாடல்கள் அமைகிறது. புராணிகர் பேசுவது அதன் தன்மை கெடாத வகையில் ஆங்கிலத்தில் வருகிறது.      உயர்ஜாதியினைச்சேர்ந்தவனின் மனதளவில் ஒரு செயலினைச் செய்ய நினைப்பதற்கும், அதனைச்செய்யும்போது ஏற்படும் சமூகத்தின் எதிர்வினைக்கான பதட்டத்தினையும், பலம், பலவீனத்தைய