துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்!
துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்! டெட் டாக்ஸ் உரைகளை யூட்யூபில் பார்த்திருப்பீர்கள். அதில் துறை சார்ந்த பிரபலம் ஒருவர், மேடைக்கு வந்து தன்னுடைய அனுபவங்களை அங்கு கூடியுள்ள மக்களிடம் பகிர்ந்துகொள்வார். அவர் தொழிலதிபராக, திரைப்பட இயக்குநராக, பாடகராக, விளையாட்டு வீரராக இருக்கலாம். தனது அனுபவங்களை கூடியுள்ள மக்களுக்கு கடத்துகிறார். இந்த பேச்சு நீண்டதாக இருக்கலாம். அல்லது சிறியதாக இருக்கலாம். ஆனால், ஒருவர் தன்னுடைய கதையை பிறருக்கு கூறுகிறார். கதை சொல்லும், அதை கேட்கும் ஆர்வம் உடையவர்கள்தான் நாம். எனவே டெட் டாக்ஸ் மகத்தான வெற்றி பெற்று உள்ளது. இதை நகல் செய்து டென்சென்ட் நியூஸ் நிறுவனம் சீனாவில் 2016ஆம் ஆண்டு ஸ்டார் டாக்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதில், நூறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பேசுவார்கள். மக்கள் அவர்களின் அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். இது மக்களில் பலருக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. பிரபலங்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கையைக் கடந்து, வேறு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும் கூறுகி...