இடுகைகள்

ரே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விழிப்புணர்வுடன் செய்யப்படும் கொலைகள்- ராபர்ட ஹரேவின் பணிக்கால வாழ்க்கை

படம்
  கொலைகளை செய்கிறார்களே இவர்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதாக என சிலர் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது. தான் செய்வது என்னவென்று செய்யும் கொலையாளிகளுக்கு தெரியும். அவர்கள் அதற்கான இயல்பில்தான் கொலைகளை செய்கிறார்கள். அதை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாமல் மறைக்கிறார்கள். இதில் சைக்கோபாத்களுக்கு உள்ள பொதுவான தன்மை, சிறுவயதில் வன்முறையை, அவமானங்களை, மாறாத துயரங்களை அனுபவிப்பது. இப்படி பாதிப்புகளை எதிர்கொள்ளும் அனைவருமே பிறரை கொல்வதில்லை. சமூகத்தை வதைப்பதில்லை. சிலர் மட்டும் அந்த வலியில் இருந்து மீளாமல் நின்றுவிடுகிறார்கள். பிறகு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நினைத்துப் பார்க்க முடியாத வலியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நாம் சரியாக அடையாளம் காணாதபோது நாமே கூட அவர்களுக்கு இரையாகி இறந்துபோகலாம். ஏன் இறந்தோம் என்பதற்கான காரணத்தைகொலைகாரர் பிடிபடும்போது கூறுவார். அல்லது அவரது பினாமியாக பத்திரிகையாளர்கள் நூல்களை எழுதுவார்கள் கே.என்.சிவராமன் போல நூல்களை சாதனை விலையில் விற்பார்கள். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறதுதான். இன்று சமூகத்தில் நிலவும் பிரச்னை என்னவென்றால் குற்றத்தைப்