இடுகைகள்

அமர்சித்ரகதை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமர்சித்ர கதை! - கனவுலகின் வரலாறு!

படம்
குழந்தைக் கனவுலகின் கதைசொல்லி - அமர சித்திர கதை வரலாறு !- ச . அன்பரசு இணையத்தில் நொடிக்கு நொடி வீடியோ க்கள், அனிமேஷன் தொடர்கள் ரிலீசாகும் இன்றைய காலத்திலும் காமிக்ஸ் புத்தகங்கள் ஹிட் அடிப்பது சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம் . டவுட்டே வேண்டாம் நாங்கள் சாத்தியப்படுத்தியிருக்கிறோம் என தம்ஸ் அப் காட்டுகிறது அமர்சித்ர கதா நிறுவனம் . இருபது மொழிகளில் நானூறுக்கும் மேலான காமிஸ் வெளியீடுகளோடு இ ந்தியாவெங்கும் 9 கோடி காமிக்ஸ் பிரதிகள் விற்பனை என அமர்சித்ரகதா நிறுவனம் சக்கைப்போடு போட்டு வருகிறது அரிய சாதனைதானே! புத்தகத்தோடு சுணங்காமல் இன்றைய ஜென் இசட் தலைமுறைக்கேற்ப யூட்யூப் சேனல்கள் , டிவி , மொபைல் கேம்கள் , தனக்கென ஸ்பெஷல் ஆப்களையும் கொண்டு நவீனத்திற்கேற்ப டிஜிட்டலாக மாறி குழந்தைகளின் ஆகாயத்தை கலர்ஃபுல்லாக்கி வருகிறது அமர்சித்ர கதைகள் . இன்றைய அமர்சித்ர காமிக்ஸ் கதைகளின் வளர்ச்சி ஒரே நாளிலோ , ஓரிரவிலோ வந்துவிடவில்லை . 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காமிக்ஸ்கள் பொது அறிவுத்தகவல் களின் திரட்டாய் குழ