இடுகைகள்

எலன் மஸ்க்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவீன தாமஸ் எடிஸன் இவர்தான்!

படம்
உலகின் மாஸ்டர் கண்டுபிடிப்பாளர் ! உலகமே கால்பந்து காய்ச்சலில் வீழ்ந்துகிடந்த அந்நேரத்திலும் தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற மெனக்கெட்டு மினி நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி ஆச்சரியப்படவைத்திருக்கிறார் நவீன தாமஸ் எடிசனான எலன் மஸ்க் .  டெஸ்லாவின் பெயரை நீக்கி நிறுவனத்தை தனதாக்கியது , ஊழியர்களின் மின்னஞ்சல் எழுத்துப்பிழையை விமர்சிப்பது , ஆறிய காபியை சந்திப்பு டேபிளில் ஊற்றுவது , உற்பத்தி தாமதத்திற்கு மூத்த அதிகாரிகளை அவர்களின் மனைவி முன்னால் வசைபாடுவது என்பது மஸ்கின் சிஇஒ குணங்கள் . அதற்கு மாற்றாக இன்னொருபுறம் , பல்வேறு துறைகளிலும் சிறப்பாக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மாணவர்களுக்கு அறக்கட்டளை உதவிகளை வழங்குவது , வாரத்திற்கு நூறு மணிநேரங்கள் உழைப்பது , அத்தனை தொழில்நுட்பங்களிலும் தொழில் தொடங்குவது என அதிரடிப்பது இவரது ஸ்டைல் . " தலை காயமுறும்படி நீங்கள் யோசிக்கவேண்டும் . புதிதாக யோசித்து யோசித்து இரவு தூங்கச்செல்லும்போது உங்கள் ஒவ்வொருவரின் தலையிலும் காயம் கட்டாயம் இருக்கவேண்டும் " என்று அதிகாரிகளை மிரட்டுபவர் செவ்வாயில் இறக்க விரும்பி அங்கு குட