ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?
ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா? நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை. அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ...