இடுகைகள்

விநோத எல்லைகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்லைகள் யாருக்கு சொந்தம்?

படம்
விநோத எல்லைகள்! Angle Inlet அமெரிக்கா – கனடாவுக்கு இடையிலான எல்லை இது. வுட்ஸ் ஏரியும் காடுமாக உள்ள பகுதி. மின்னசோட்டாவிலிருந்து சாலை வழியாக வருவதை விட வுட்ஸ் ஏரி வழியாக பயணிப்பதே எளிமையானது. Azerbaijan-Armenia அசெர்பைஜான் நாட்டின் நான்கு தீவுகள் அர்மேனியாவின் எல்லைக்குள் இருக்கும் எல்லைப்பகுதி. நக்ஸ்சிவன் தீவு மட்டுமல்ல பிற தீவுகளின் நிலையும் இதுபோல அந்த நாடா, இந்த நாடா என மூளையை குழப்புவதுதான். United Arab Emirates-Saudi Arabia -Oman அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கிடையேயான எல்லை என்பது இன்றுவரையும் தோராயமான ஒன்று. நாடுகளுக்கிடையே பாலைவனம் நீண்டு கிடப்பதால் எல்லையை உடனே பிரிக்கவேண்டுமென அதிகாரிகள் அவசரப்படவில்லை. Alaska-Canada அலாஸ்கா – கனடா எல்லைப்புறப்பகுதி பாறை மற்றும் பனிநிலங்களைக் கொண்டது. கனடாவின் யுகோன், பிரிட்டிஷ் கொலம்பியாவை கிழித்து செல்கிறது. India-Bangladesh-Nepal வங்கதேசத்தை நேபாளத்தை பிரிக்கும் எல்லைப்பகுதி இந்தியாவின் கிழக்கு பகுதியை உள்ளடக்கியது. இதனால் இப்பகுதி யாருக்கும் சொந்தம் என குறிப்பிடுவது சிரமம்.