ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!
உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன? ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன. ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம். ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்...