ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!

 

 



 

உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன?


ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன.

ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம்.

ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்ளதா?

ஓநாய். திறந்தவெளியில் வாழ்ந்து வருகிற விலங்கினம். இந்தியாவில் எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் வரையிலான ஓநாயினம், பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில்தான் வளர்கிறது. இருநூறு முதல் இருநூற்று ஐம்பது சதுர கி.மீ. தொலைவுக்கு ஓநாய் அலைந்து திரிகிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிற நவீன காலத்தில், இந்த இடங்களை பாதுகாக்க முடியவில்லை. எதிரிகளால் தாக்கப்படுவதை விட வாழிடம் அழிப்பு, வளர்ச்சிப்பணி திட்டங்கள், புல்வெளி பரப்பு மறைவது ஆகியவை காரணமாக ஓநாய்கள் நெருக்கடிகளை சந்திக்கின்றன. காடுகளில் உள்ள யானைகள், ஓநாய்கள் வாழிடம் சார்ந்த நெருக்கடிகளை சந்திப்பதில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

ஓநாய்களை பிடித்துவிட்டால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடுமா?

உபி வனத்துறை நான்கு ஓநாய்களை பிடித்துவிட்டனர். இன்னும் இரண்டு பாக்கியுள்ளது. அவற்றையும் முழுமையாக பிடித்துவிட்டால் மனிதர்கள் மீதான தாக்குதல் நின்றுவிடும். இப்போதைக்கு அங்கு வாழும் மனிதர்களுக்கு முன்னுரிமை அளித்தால், ஓநாய்களை பிடிப்பதே ஒரே வழி.

மனிதர்கள் விலங்குகள் மோதல் அதிகரித்து வருகிறதே?

காடுகள் அதிகளவு அழிந்துகொண்டே வருவதால், யானை, சிறுத்தை, கரடி, புலி ஆகிய விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. உணவு, குடிநீர் இல்லாத காரணத்தால் விலங்குகள் மனிதர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் மக்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கூடுதலாக உயிர்களுக்கு அச்சுறுத்தலும் கூடுகிறது.

விலங்குகளின் தாக்குதல் பற்றி பிரசாரம் செய்வதோடு அவற்றைக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அழியும் அபாயத்திலுள்ள ஓநாய்களைக் காப்பாற்ற முடியும். ஓநாய் வாழிடங்களை கவனமாக பராமரித்து இயற்கையாகவே இரைகளை கிடைக்கும்படி பார்த்துக்கொண்டால் மனிதர்களுக்கு அபாயம் இல்லை.


பேராசிரியர் பிலால் ஹபீப்
டேராடூன் வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட்
toi


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்