வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை

 

 

 

 

 

 

 




வாக்கு வங்கி எனும் சூழ்ச்சி

 வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை

 சில சமயங்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படும்  சிறுபான்மை இனக்குழுவில்  இருப்பது  குறித்து எண்ணி ஆச்சர்யமுறுவேன். நான் முஸ்லீமோ (அ) தலித்தோ அல்ல. பெண்ணும் அல்ல. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவனும் இல்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களைவிடவும் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்கள் பெரிதும் தோற்றத்தில் வேறுபடுகிறவர்கள் ஆவர். வங்கியில் வெளிநாட்டில் வேலை செய்தபோது, இந்தியர்களை வித்தியாசம் பாராட்டும் தன்மை என்னை சிறுபான்மையினராக உணரச்செய்தது. இன்றும் அந்த பாகுபாடான மனநிலை அற்பத்தனமானது என்றே நினைக்கிறேன்.

 சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களது உணர்ச்சிகளை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை கூற அதிக துணிச்சல் தேவைப்படுகிறது. அவர்களின் சூழலை உணர்ந்து பேச நம்மில் பெரும்பான்மை இனக்குழு சார்ந்தவர்களுக்கு கூட முழுமையான தகுதி இல்லை.

 சிறந்த இந்தியாவை உருவாக்கத் தேவை, சிறந்த தலைவர்கள். நாம் அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும். வாக்களிப்பது குறித்து நாம் மேலும் சிறப்பாகக் கற்கவேண்டும். அதனை சரியாக செய்யாத நிலையில்தான், சமூகத்தின் மிக மோசமான அறமே இல்லாத மனிதர்கள் மேலே உயர்த்தப்படுகிறார்கள். வளர்ந்து மேலே பெரிய பதவிகளில் உள்ளார்கள். இதற்கு காரணம் நாம் மோசமான சமூக அமைப்பை கொண்டிருக்கிறோம் (அ) வாக்களிப்பது குறித்த நமது அறியாமை என்று கூறலாம். பெரும்பாலும், வேட்பாளர்கள் நம்மை முட்டாள்களாகவே வைத்திருக்க கற்றுக்கொண்டு விட்டார்கள்.

வாக்குவங்கி அரசியலின் மூலம் அரசியல்வாதிகள் நம்மை முட்டாள்களாக்குகிறார்கள். சிறுபான்மை சமுதாயத்தின் மீதுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டு அச்சமுதாயத்தின் காவலர்களாக தம்மை அறிவித்துக்கொண்டு, அச்சமுதாயத்தினரை தமக்கு வாக்களிக்க அறிவுறுத்துகிறார்கள். சிறுபான்மை சமுதாய உறுப்பினர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி அதிகாரம் வந்தபின் தம்மைக் காத்துநிற்கும் என்று நம்புகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அந்த நம்பிக்கை நிறைவேறுவதில்லை. திறமையும், நேர்மையும் இல்லாத தவறான ஒருவரை தேர்ந்தெடுத்தால் என்ன நிகழும்? சிறுபான்மை சமுகத்தின் நம்பிக்கை அடையாளமாக அவர் கருதப்படுவதால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 பல்லாண்டுகள் கடந்துபோனபின்னும் சிறுபான்மை சமுதாயம் தொடர்ந்து பாகுபாட்டுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரும் ஆசைகாட்டி போலித்தனமாக வாக்குவங்கி அரசியல் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினர்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையினரில் அதிகமாகும். இனக்குழுரீதியாக அவர்களும் வேற்றுமை பாராட்டுவதில் தவிர்க்கப்பட முடியவில்லை. இந்த அநீதியை எதிர்க்க அனைத்து சிறுபான்மையினரும் ஒன்றாக அணிதிரண்டால், அரசியல்வாதிகளின் வாக்குவங்கி அரசியலை நம்பிக்கையுடன் தடுத்து நிறுத்த முடியும்.

 எனது அன்பிற்குரிய முஸ்லீம் சகோதர சகோதரிகளே உங்களால்  முடியும். ஆம். நீங்கள் அரசியல்வாதிகளால் காலம்தோறும் ஏமாற்றப்பட்டு வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து வித்தியாசம் பாராட்டப்படும் நிலையில் வைக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் பல இலவசங்களை உங்களுக்கு வழங்கி, நாட்டைத் தொடர்ந்து வறுமையில் வைத்து இருப்பதோடு, மிக மோசமான நிர்வாகத்தின் கீழே தள்ளுகின்றனர். அடிப்படை மற்றும் முறையான கட்டுமானங்கள், நீர்ப்பாசன வசதிகள், தேவையான பள்ளிகள், கல்லூரிகள் (அ) மருத்துவ வசதிகள் என ஒவ்வொரு குடிமகனுக்கும்  மதிக்கத்தக்க வாழ்வை அவர்கள் உருவாக்கவே இல்லை. ஆம். அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையுமே ஏமாற்றுகிறார்கள். 


அவர்கள் தங்களின் மோசமான நிர்வாகக் குறைபாடுகளை, நாட்டின் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து கவனத்தை   திசை திருப்ப இந்து - முஸ்லீம் பிரிவினை விவாதங்களை ஏற்படுத்தி அதில் மக்களாகிய நம் கவனத்தை சிதறடிக்கின்றனர். ஒரு மாணவனுக்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அவன் இந்துவாக (அ) முஸ்லீமாக இருப்பதில் என்ன பிரச்சனை?, இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்படுத்தும் பாதிப்பு ஒன்றுதான். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளை விலங்கினும் கேவலமாக நடத்துகிறபோது அங்கு நோயாளியின் மதம் என்பது முக்கியமானதல்ல. 90% இந்தியர்கள் புதிய நல்ல  காய்கறி, பழங்களை பணவீக்கத்தினால் வாங்க முடியவில்லை என்பது குறிப்பிட்ட இனக்குழுவை மட்டுமே பாதிக்கக்கூடியதா என்ன?

 நாம் அனைவரும் இந்த நேரத்தில் பிரச்சனைகளின் தீர்வு குறித்து அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கவேண்டும். அவர்கள் அதற்கு பதிலாக செயற்கையான பிரச்சனைகளை உருவாக்குவதன் முன்னமே இந்தியாவின் முஸ்லீம்கள்  அரசியல்வாதிகளை வேலை செய்ய துரிதப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன். தங்களின் ஒட்டுகளை (அ) கௌரவத்தை எந்த அரசியல் கட்சிகளும் தீர்மானிக்க அவர்கள் அனுமதிக்க கூடாது. காலம் அவர்கள் கூறியதை உங்களுக்கு வழங்கச் செய்யும். தொடர்ந்து நிலையில்லாத வாக்குகளின் மூலம், இறுதியில் சிறந்த (அ) தீமைகள் குறைவாக உள்ள கட்சிக்கு வாக்களிக்க முயலலாம். காலம் கடந்தும் உங்களின் வாக்குகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும்.

 சிறுபான்மை சமுதாயத்தின் மீது குறிப்பிட்ட வடிவங்களில் (அ) பிறரால் வித்தியாசம் பாராட்டப்படும்போது, மேலே உள்ள காரணத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சட்டரீதியாக வேற்றுமை, பாகுபாடு பாராட்டுதலை தவிர்த்தும் கலாசாரரீதியாக நாம் தாராள மனதைக் கொண்டிருக்காத போது, இந்தியா வளர்ந்த நாடு என்பது கனவில் வரும் ஒன்றுதான்.

 இந்திய வரலாற்றில் முக்கியமான புள்ளியில் நாம் நிற்கிறோம். குறிப்பிடத்தக்க பகுதியைச் சேர்ந்த மக்கள் மாற்றம் வேண்டிய தாகத்துடன் நிற்கிறார்கள். வாக்குவங்கி அரசியல், மதவெறுப்பு அரசியல் ஆகியவற்றை பிரசாரம் செய்பவர்களை, இந்தியர்களல்லாதவர்கள் என அடையாளப்படுத்தவேண்டும். மேலும் நமது மதங்களுக்கு இது சோதனையான காலம். இது நமது நாடு; தங்களுடையதும் என்னுடையதுமானது. அதனை சிறந்ததாக உருவாக்கவேண்டாமா? நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா?

எழுத்தாளர் சேட்டன் பகத் எழுதிய கட்டுரையொட்டி எழுதப்பட்ட தமிழாக்க கட்டுரை.


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்